செய்திகள் வணிகம்
நச்சுணவால் நெஸ்ட்லெ, டெனன் பால்மாவு மீட்பு: நிறுவனங்கள்மீது விசாரணை
பாரிஸ்:
உலகப் புகழ்பெற்ற நெஸ்ட்லெ, டெனன் பால்மாவுத் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் பொருள்களில் அண்மையில் நச்சு கண்டறியப்பட்டதும் அவற்றை மீட்டுக்கொள்ளும் நடவடிக்கையில் தாமதம் காட்டியதாக பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் ஊடகங்கள்வ குற்றஞ்சாட்டியுள்ளன.
குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான ‘செரியுலைட்’ (Cereulide) என்ற நச்சுப்பொருள் பால் மாவில் கலந்திருந்தது குறித்து ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளுக்கு தாமதமாகத் தெரிவிக்கப்பட்டதாக ரேடியோ பிரான்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.
சீனாவின் ‘கேபியோ பையோடெக்’ என்ற நிறுவனத்திடம் பெறப்பட்ட மூலப்பொருளில் அந்த நச்சு கண்டுபிடிக்கப்பட்டது. நெஸ்ட்லெ, டெனன், லக்டாலிஸ் போன்ற மழலையர் உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் அந்த மூலப்பொருளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
பல நாடுகளில் அந்நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட பால்மாவு உணவுப் பொருள்கள் தற்போது மீட்கப்பட்டுவருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
