செய்திகள் வணிகம்
அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சால் ரிங்கிட் உயர்வு: சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்
கோலாலம்பூர்:
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு வழிவகுக்கும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை ரிங்கிட் அமெரிக்க டாலர், பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராக சற்று உயர்ந்து வலுவான நிலையில் உள்ளது.
காலை 10 மணிக்கு, உள்ளூர் நாணயம், திங்கட்கிழமை மூடலின் போது இருந்த 3.9510/9550 என்பதிலிருந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9500/9560 ஆக வலுப்பெற்றது.
பேச்சுவார்த்தைகள் "நன்றாக முன்னேறி வருவதாக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாகத் தெரிகிறது. அதே சமயம், பாகிஸ்தானின் இராணுவத் தலைவர், ஓர் ஒப்பந்தம் "எட்டப்படுவதற்கு நெருக்கமாக உள்ளது" என சீனாவிற்குத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் ஒரு சமரசத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தோன்றினாலும், உறுதியான எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என்று மலேசிய முவமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மத் அப்ஸானிசம் அப்துல் ரஷித் குறிப்பிட்டுள்ளார்.
"இதற்கிடையில், வாழ்க்கைச் செலவின் மீதான தாக்கமும், உலகளாவிய மத்திய வங்கிகள் தங்கள் கட்டுப்பாட்டு பணவியல் கொள்கை நிலைப்பாட்டைப் பராமரிக்க வேண்டியதன் அவசியமும், அதிகரித்து வரும் மகசூல் மூலம் பத்திரச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
"சுருக்கமாக கூறின், முன்னோட்டம் இன்னும் மங்கலாக உள்ளது, மேலும் வர்த்தகர்கள் உண்மையான பொருளாதாரத்தின் மீதான தாக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வாய்ப்புள்ளது" என்று முஹம்மத் அஃப்சானிசாம் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
நடைபெற்று வரும் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை குறித்த மேலதிக விவரங்களுக்காக சந்தை பங்கேற்பாளர்கள் காத்திருக்கும் நிலையில், ரிங்கிட் இன்று 3.94-3.95 ரிங்கிட் வரையிலான வரம்பில் குறுக்காக (sideways) வர்த்தகமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்றைய திறப்பின் போது, முக்கிய நாணயங்களின் கூடைக்கு எதிராக ரிங்கிட் அதிகமாக வர்த்தகமானது.
திங்கட்கிழமை மூடலின் போது இருந்த 2.4860/4887 என்பதிலிருந்து, ஜப்பானிய யென்னுக்கு எதிராக 2.4847/4887 ஆகவும், நேற்று மூடலின் போது இருந்த 4.5998/6044 என்பதிலிருந்து, யூரோவுக்கு எதிராக 4.5958/6028 ஆகவும், முன்னர் இருந்த 5.3311/3365 என்பதிலிருந்து, பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.3301/3382 ஆகவும் வலுப்பெற்றது.
உள்ளூர் நாணயம், பிராந்திய நண்பர்களுடன் ஒப்பிடும்போது பெரும்பாலும் அதிகமாக இருந்தது. இருப்பினும், இந்தோனேசிய ரூபியாவுடன் 222.6/223.0 என மாறாமல் இருந்தது.
நேற்று மூடலின் போது இருந்த 3.0932/0966 என்பதிலிருந்து, சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.0917/0967 ஆக உயர்ந்தது. நேற்று மூடலின் போது இருந்த 6.43/6.44 என்பதிலிருந்து, பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக 6.42/6.44 ஆக சற்று உயர்ந்தது. மேலும், திங்கட்கிழமை மூடலின் போது இருந்த 12.1640/1816 என்பதிலிருந்து, தாய் பாட்டுக்கு எதிராக 12.1445/1704 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில், இன்றைய நிலவரப்படி இந்திய ரூபாய் ஒரு ரிங்கிட்டிற்கு 24.04 காசாக சரிந்துள்ளது. டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 95.34 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 1, 2026, 3:03 pm
பிரபலமான கன்வேயர் சுஷி உணவகமான சுஷிரோ, KLCC கிளையை மூட சுகாதார அதிகாரிகள் உத்தரவு
June 30, 2026, 11:39 am
முகநூலில் அதிகரித்துவரும் சட்டவிரோத வனவிலங்கு விற்பனை: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
June 27, 2026, 6:29 pm
ஒரு கிலோ 1 ரிங்கிட்: 3,000 கிலோ துரியன் பழங்கள் வெறும் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன
June 26, 2026, 12:47 pm
2ஆவது ஆண்டாக மலேசிய - டிலி வர்த்தக மாநாடு, கண்காட்சி முதலீட்டுக்கான சிறந்த வாய்ப்பு: டைலான்
June 25, 2026, 10:10 am
தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் பணவீக்கம் சரிந்துள்ளது: அர்மிசான்
June 24, 2026, 7:10 am
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
June 22, 2026, 12:21 pm
மத்திய கிழக்கு பதற்றத்தால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு
June 18, 2026, 4:49 pm
