நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மதுபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகள்; மரணத் தண்டனை தேவையில்லை: அந்தோனி லோக்

புத்ராஜெயா:

மதுபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகளுக்கு மரணத் தண்டனை தேவையில்லை.

போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.


பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தபோதிலும், மது அல்லது போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்குச் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் மரண தண்டனையை அறிமுகப்படுத்தும் சாத்தியத்தை அவர் நிராகரித்தார்.

கட்டாய மரண தண்டனையை அரசாங்கம் ரத்து செய்துவிட்டதால், இது குறித்துப் பரிசீலிக்கப்படவில்லை.

எனவே, இது நாங்கள் பரிசீலிக்கும் ஒரு விஷயம் அல்ல என்று அவர் இங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுவரை குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் செயல்களால் மற்றொருவர் உயிரிழந்தால், அவர்கள் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்படலாம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கையாள்வதற்கு ஏற்கனவே சட்டங்கள் உள்ளன.

கடந்த மாதம், கிள்ளானில் மது, போதைப்பொருள் போதையில் இருந்ததாகக் கூறப்படும் ஓட்டுநர் சம்பந்தப்பட்ட ஒரு மோசமான விபத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கட்டாயப்படுத்தும் ஒரு சட்டத் திருத்தத்தை தனது அமைச்சு முன்மொழிந்ததாக லோக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset