செய்திகள் மலேசியா
முதலில் நட்பு, பிறகு காதல், இறுதியில் ஏமாற்றம்: காஜாங்கில் இயங்கிய லவ் ஸ்கேம் கும்பல் பிடிபட்டது
ஷா ஆலம்:
சமீபத்தில் காஜாங் சுற்றுப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றும் முன், அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்துவது கைது செய்யப்பட்ட காதல் மோசடி கும்பல் பயன்படுத்திய உத்திகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரியில் இருந்து இயங்கி வரும் இந்த மோசடி கும்பல், இந்தோனேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களையும் குறிவைத்துள்ளதாக நம்பப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, அதிகாலை 2.15 மணியளவில், காஜாங் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு குழுவினரின் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷாஸேலி கஹார் தெரிவித்தார்.
"செமின்யேவில் உள்ள கியாரா பிளாசாவில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சம்பந்தப்பட்ட கும்பலின் செயல்பாட்டு மையமாக அந்த வீடு இருந்ததாக நம்பப்படுகிறது.
"29 முதல் 37 வயதுக்குட்பட்ட நான்கு வெளிநாட்டு ஆண்களை, காதல் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டதை ஒட்டி, போலிஸார் கைது செய்தனர்" என்று அவர் திங்கட்கிழமை சிலாங்கூர் கான்டிஞ்சென் போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கூறினார்.
மேலும், நான்கு மடிக்கணினிகளுடன் 11 கைப்பேசிகள் என, மொத்த மதிப்பு ரிம20,000 என மதிப்பிடப்பட்ட பொருட்களையும் போலிஸார் பறிமுதல் செய்ததாக அவர் தெரிவித்தார்.
"அனைத்து சந்தேக நபர்களும், டெலிகிராம் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் ஆபரேட்டர்களாகச் செயல்பட்டனர். பின்னர், அவர்கள் வாட்ஸ்ஆபைப் பயன்படுத்தி மேலும் பாதிக்கப்பட்டவரை நெருங்குவர்" என்று அவர் விளக்கினார்.
மோசடியைச் செயல்படுத்துவதற்கு முன் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் நட்பு அல்லது காதல் உறவை ஏற்படுத்துவார்கள் என்று ஷாஸேலி கஹார் கூறினார்.
"பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள், உண்மையில் இல்லாத பரிசுப் பொருட்களை அனுப்புவதாகக் கூறப்படும் பணத்தைப் பெறும் நோக்கத்திற்காக, வேறொரு கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன" என்றார் அவர்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420, 120B ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
"மேலதிக விசாரணைக்காக, அனைத்து கைதுகளும் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்," என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 5:46 pm
லெபனான் நிறுவனத்தின் நகைகளை நான் ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை: ரோஸ்மா
April 13, 2026, 5:45 pm
பொறியியல் நிறுவனத்திடமிருந்து பெர்சத்து கட்சிக்கு 800,000 ரிங்கிட் கிடைத்தது: வங்கி அதிகாரி
April 13, 2026, 5:43 pm
மக்களின் குரல்களும் கருத்துகளும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்: ரவீன்குமார்
April 13, 2026, 4:28 pm
மாணவியைக் காலால் உதைத்துத் தள்ளிய மாணவன்: பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்புக்குக் கேள்விக்குறி
April 13, 2026, 4:08 pm
உயர்கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'மெனு காசெ சிஸ்வா' உணவுத் திட்டம்
April 13, 2026, 3:44 pm
