நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டு வாசலில் கார் நிறுத்தியதால் வெட்டு:  70 வயது முதியவரைப் பாராங்கத்தியால் தாக்கிய அண்டை வீட்டார்

பத்து பஹாட்: 

தனது வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தியதற்காக கோபத்தில், ஒரு அண்டை வீட்டாரின் கையைப் பாரங் கத்தியினால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில், ஒரு வேலையில்லாதவருக்கு இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது.

திருமணமாகாத குற்றஞ்சாட்டப்பட்டவர், கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி காலை 7 மணியளவில், கம்போங் சுங்கை ஆயாமில் உள்ள ஒரு வீட்டில், பாரங் கத்தியைப் பயன்படுத்தி, 70 வயதுடைய பாதிக்கப்பட்டவருக்கு வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324-ன் கீழ் இந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது அந்தத் தண்டனைகளில் ஏதேனும் இரண்டும் விதிக்கப்படலாம்.

 சம்பவம் நடந்த நாளில், பாதிக்கப்பட்டவர் தனது வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தியதாகக் கோபத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரிடம் வந்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் பின்னர் பாதிக்கப்பட்டவரை நோக்கி பாரங் கத்தியை வீசி கையில் காயத்தை ஏற்படுத்தினார்.

பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

புகார் அளிக்கப்பட்டதன் பேரில், அதே நாள் மதியம் 1.30 மணிக்கு போலிஸார் குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்தனர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset