செய்திகள் மலேசியா
திரங்கானுவில் வறுமையை ஒழிப்பதற்காக இந்த ஆண்டு ரிம60 மில்லியன் ஒதுக்கப்படுகிறது
கோலா திரங்கானு:
திரங்கானுவில் இந்த ஆண்டிற்கான வறுமை ஒழிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக RM60 மில்லியன் சிறப்பு ஒதுக்கீட்டை மடானி அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த முன்னெடுப்பானது குறிப்பாக குறைந்த வருமானம் பெரும் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதிலும், வீடுகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
இன்று இங்குள்ள யயாசான் திரங்கானுவின் இம்தியாஸ் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற, திரங்கானு மாநில தஹ்பீஸ் மாணவர்களுடனான பிரதமரின் மடானி நல்லுறவு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், மதக் கல்வி பயிலும் மாணவர்களிடையே செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைச் செவ்வனே கற்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
"தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியமானது. நாம் பின்தங்கி விடக்கூடாது," என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், திரங்கானுவில் உள்ள 18 தஹ்பீஸ், பொண்டோக் பள்ளிகளை உள்ளடக்கிய உள்கட்டமைப்பு, வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்காக, ரிம1.8 மில்லியன் ஒதுக்கீட்டில் 18 திட்டங்களையும் அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கல்வி முறையானது, அறிவிற்கும் நாகரீகத்திற்கும் இடையிலான சமநிலையைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும், சமூகத்தில் பிளவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அன்வர் கருத்துரைத்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 3:44 pm
30 எரிவாயு சிலிண்டர்களைக் கடத்த முயன்ற சரக்கு படகு ஓட்டுநர் அதிகாலையில் கைது செய்யப்பட்டார்
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 2:43 pm
வழக்கறிஞர் அலுவலகத்தில் பற்றி எரிந்த தீ: 70 சதவீத கட்டிடம் சேதம்
April 13, 2026, 2:34 pm
கடலில் குதித்து தப்பிய கும்பல்: RM10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு
April 13, 2026, 2:11 pm
மிகவும் சிக்கலான அந்நியத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: நூருல் இசா
April 13, 2026, 2:10 pm
சாத்தியமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தயாராக இருங்கள்; ஆனால் பீதியடைய வேண்டாம்: சைபுடின்
April 13, 2026, 2:09 pm
மதுபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகள்; மரணத் தண்டனை தேவையில்லை: அந்தோனி லோக்
April 13, 2026, 2:08 pm
