செய்திகள் இந்தியா
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
நொய்டா:
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வை வலியுறுத்தி தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போராட்டக்காரர்கள் ஆவேசமடைந்து பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதோடு, பல வாகனங்களுக்குத் தீ வைத்ததால் அப்பகுதியே போர்க்களமாகக் காட்சியளித்தது.
தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் தங்களுக்கு உரிய ஊதிய உயர்வு வழங்கக் கோரி இந்தப் போராட்டத்தைத் தொடங்கினர். தொடக்கத்தில் அமைதியாக நடைபெற்ற இந்தப் போராட்டம், திடீரெனக் கட்டுப்பாட்டை மீறி வன்முறையாக மாறியது.
ஆத்திரமடைந்த கும்பல் தொழிற்சாலை வளாகத்திற்குள் புகுந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த அலுவலகப் பொருட்கள், கணினிகளைச் சேதப்படுத்தியது.
குறிப்பாக, சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் போராட்டக்காரர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். வன்முறை தொடர்பான முதற்கட்ட விசாரணையில், சொத்துக்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அப்பகுதியில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதுடன், வன்முறையில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறியக் காவல்துறையினர் கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் காரணமாகத் தொழிற்சாலைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
