செய்திகள் மலேசியா
30 எரிவாயு சிலிண்டர்களைக் கடத்த முயன்ற சரக்கு படகு ஓட்டுநர் அதிகாலையில் கைது செய்யப்பட்டார்
தாவாவ்:
மானியம் பெற்ற 30 திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை அண்டை நாட்டிற்குக் கடத்த முயன்ற ஆடவர் ஒருவரை மலேசிய கடல்சார் அமலாக்க மையம் கைது செய்துள்ளது.
காலை 6.20 மணியளவில், பத்து 3 படகுத்துறையிலிருந்து செபாத்திக் தீவை நோக்கிச் சென்ற ஒரு சரக்குப் படகு தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 36 வயதுடைய அந்த ஆண், ஓப் புளூட்டோ தீமூர், ஓப் திரிஸ் நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்டார்.
தாவாவ் கடல்சார் மண்டல இயக்குநர் கடல்சார் கேப்டன் அரிப்பின் கஜாலி, பத்து 3-க்கு தெற்கே 1.6 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்ட அந்தப் படகை ஆய்வு செய்ததில், எந்தவொரு சரியான அனுமதியும் இல்லாமல் 30 எரிவாயு சிலிண்டர்களை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவை அண்டை நாட்டிற்குக் கடத்தப்படுவதாக நம்பப்படுவதாகவும் தெரிவித்தார்.
1961ஆம் ஆண்டின் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம், 2002 ஆம் ஆண்டின் சபா துறைமுகங்கள், படகுத்துறைகள் துறைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 5:46 pm
லெபனான் நிறுவனத்தின் நகைகளை நான் ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை: ரோஸ்மா
April 13, 2026, 5:45 pm
பொறியியல் நிறுவனத்திடமிருந்து பெர்சத்து கட்சிக்கு 800,000 ரிங்கிட் கிடைத்தது: வங்கி அதிகாரி
April 13, 2026, 5:43 pm
மக்களின் குரல்களும் கருத்துகளும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்: ரவீன்குமார்
April 13, 2026, 5:25 pm
முதலில் நட்பு, பிறகு காதல், இறுதியில் ஏமாற்றம்: காஜாங்கில் இயங்கிய லவ் ஸ்கேம் கும்பல் பிடிபட்டது
April 13, 2026, 4:28 pm
மாணவியைக் காலால் உதைத்துத் தள்ளிய மாணவன்: பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்புக்குக் கேள்விக்குறி
April 13, 2026, 4:08 pm
