செய்திகள் மலேசியா
வழக்கறிஞர் அலுவலகத்தில் பற்றி எரிந்த தீ: 70 சதவீத கட்டிடம் சேதம்
ஜார்ஜ்டவுன்:
இங்குள்ள லெபு கிங் (Lebuh King) பகுதியில் வழக்கறிஞர் அலுவலகமாகச் செயல்பட்டு வந்த இரண்டு மாடி கடைவீடு ஒன்றில், இன்று திங்கட்கிழமை மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மதியம் 12.14 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, மீட்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 20-க்கு 80 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்தப் பழமையான கட்டிடத்தின் 70 விழுக்காடு பகுதிகள் தீயினால் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.
பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறுகையில், தற்போது வரை தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். உள்ளே சிக்கியுள்ளதாகக் கருதப்படும் நபர்களை மீட்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 5:25 pm
முதலில் நட்பு, பிறகு காதல், இறுதியில் ஏமாற்றம்: காஜாங்கில் இயங்கிய லவ் ஸ்கேம் கும்பல் பிடிபட்டது
April 13, 2026, 4:28 pm
மாணவியைக் காலால் உதைத்துத் தள்ளிய மாணவன்: பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்புக்குக் கேள்விக்குறி
April 13, 2026, 4:08 pm
உயர்கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'மெனு காசெ சிஸ்வா' உணவுத் திட்டம்
April 13, 2026, 3:44 pm
30 எரிவாயு சிலிண்டர்களைக் கடத்த முயன்ற சரக்கு படகு ஓட்டுநர் அதிகாலையில் கைது செய்யப்பட்டார்
April 13, 2026, 3:17 pm
திரங்கானுவில் வறுமையை ஒழிப்பதற்காக இந்த ஆண்டு ரிம60 மில்லியன் ஒதுக்கப்படுகிறது
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 2:34 pm
கடலில் குதித்து தப்பிய கும்பல்: RM10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு
April 13, 2026, 2:11 pm
