நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர்கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'மெனு காசெ சிஸ்வா' உணவுத் திட்டம்

கோலாலம்பூர்: 

மாணவர்கள் மலிவு விலையில் உணவைப் பெறுவதற்கு உதவும் முயற்சியின் ஒரு பகுதியாக உயர்கல்வி அமைச்சு எதிர்வரும் காலத்தில் மெனு காசெ சிஸ்வா முன்முயற்சியை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த முன்முயற்சி, பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்படும் நல அணுகுமுறைகளுடன் ஒத்துப்போவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலனைப் பள்ளி உணவகச் செயலாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

"இந்த நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் தங்கள் சொந்த நலத் திட்டங்களைக் கொண்டுள்ளன. உணவு விலைகளை நிர்ணயிப்பதில் மாணவர்களின் நிலைமையை அவர்கள் கருத்தில் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று இன்று இங்குள்ள மெனாரா மெர்டேகா 118-இல் நடைபெற்ற செலிக் மடானி  நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் கூறினார்.

இதற்கிடையில், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, பொது உயர்கல்வி கூடங்களில் உள்ள கல்லூரி கஃப்டேரியாக்களில் உணவு, பானங்களின் விலை உயர்வதற்கான சாத்தியக்கூறுகளை கல்வி அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஜாம்ப்ரி தெரிவித்தார்.

பல கல்லூரிகளில் மாணவர் பிரதிநிதிகள் குழுக்கள் உட்பட மாணவர் தலைமையுடன் தாம் ஏற்கனவே விவாதங்களை நடத்தியதாக அவர் கூறினார்.

விலைகளை உயர்த்துவதில் பிடிவாதமாக இருக்கும் உணவகச் செயலாளர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர், அமைச்சு தொடர்ந்து இரு தரப்பு விவாதங்களை நடத்தி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கருத்துக்களைத் தெரிவிக்கும் என்றார் அவர்.

"அவர்கள் ஒத்துழைக்க முடியாவிட்டால், இந்த விஷயம் மாணவர் நலனை உள்ளடக்கியது என்பதையும், அனைத்து தரப்பினரும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்வோம் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset