செய்திகள் வணிகம்
பொருளாதாரப் புரட்சியை நோக்கி இந்திய முஸ்லிம் வணிகச் சமூகம்: கோலாலம்பூரில் தலைமைச் செயல் அதிகாரிகளின் சந்திப்பு
கோலாலம்பூர்:
மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முன்னணி தொழில் அதிபர்களை ஒன்றிணைக்கும் 'சி.ஈ.ஓ டின்னர்' (தலைமைச் செயல் அதிகாரிகள் இரவு விருந்து) நிகழ்வு, ஏப்ரல் 11-ஆம் தேதி 'பி.எஸ்.ஜே' (Buat Sampai Jadi) அமைப்பின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தொழில்முனைவோருக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதையும், வெற்றிகரமான வணிகத் தொடர்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தச் சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், கிரீன் பாக்கெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ வீரா ஷாஹுல் தாவூத் சிறப்புரையாற்றினார்.
அவருடன் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ ஸ்ரீ வசீர் ஆலம், எம்.பி.எஸ்.பி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ரஃபீ ஹனீப், பிரெஸ்மா (PRESMA) அமைப்பின் தலைவர் டத்தோ முஹ்சின், அஸ்ட்ரோ வானொலியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஜேக் அப்துல்லா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும், மலேசியாவின் சிறந்த பெண் கார்ப்பரேட் தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்த டாக்டர் ஜாஸ்மின், டத்தோ ஷாஹிரா ஆகியோருக்கும் இந்த விழாவில் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது.
பி.எஸ்.ஜே அமைப்பின் மூலம் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இந்திய முஸ்லிம் இளைஞர்களுக்கு ஓராண்டு கால இலவச வணிக வழிகாட்டுதல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் 'டீ கடை' (Tea Kadai), 'அயாம் பாவாங் ஜுல்' (Ayam Bawang Zul), 'என்ரிச் ஹோட்டல்' (Enrich Hotel) உள்ளிட்ட பல வணிக நிறுவனங்கள் இன்று கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் நிலைக்கு உயர்ந்துள்ளன.
பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி ஓராண்டிற்குள் ஒரு மில்லியன் ரிங்கிட் வருவாயை எட்டுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்காகும்.
சமூகத்தின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த விழாவில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பி.எஸ்.ஜே கார்ப்பரேட் கோபுரத்தின் மாதிரிச் சின்னம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இத்தகைய முயற்சிகள் இந்திய முஸ்லிம் சமூகத்தில் இன்னும் பல இளம் சாதனையாளர்களை உருவாக்கும் என இந்த திட்டத்தின் இயக்குநர் முஹம்மத் ரிஸ்வான் நம்பிக்கையாக தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
