செய்திகள் மலேசியா
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு டீசல் அனுப்பியதில் எங்களுக்கு தொடர்பில்லை: பெட்ரோனாஸ்
கோலாலம்பூர்:
சமீபத்தில் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி மலேசியாவிலிருந்து பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுமார் 329,000 பேரல்கள் அல்லது 52.311 மில்லியன் லிட்டர் டீசல் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளில் எங்களுக்குத் தொடர்பில்லை.
பெட்ரோனாஸ் நிறுவனம் இதனை மறுத்துள்ளது.
டீசல் விநியோகம் தொடர்பாக பிலிப்பைன்ஸில் உள்ள எந்தவொரு தரப்புடனும் தாங்கள் ஒருபோதும் எந்த ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை.
அரசாங்கம், தொடர்புடைய பங்குதாரர்களுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பின் மூலம், மலேசியாவிற்கு நிலையான மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதே பெட்ரோனாஸின் முதன்மை முன்னுரிமையாக உள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் சந்தை நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ள நேரத்தில்,
பிலிப்பைன்ஸின் எரிபொருள் விநியோகத்தை ஈடுசெய்யும் நோக்கில் இந்த டீசல் அனுப்பப்பட்டது என்று பிலிப்பைன்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 11:42 am
தேசிய கோவில் கருத்தரங்கு மகத்தான வெற்றியுடன் இலக்கையும் அடைந்தது: டத்தோ சிவக்குமார்
April 12, 2026, 11:40 am
14 மணி நேரம் இடைவிடாது கணிதப் பாடத்தை போதித்து ஆசிரியர் ஹனஹான் ஆசியான் விருது வென்றார்
April 12, 2026, 11:34 am
மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து: பன்றிப் பண்ணைக் கழிவுகளால் சிலாங்கூர் ஆறுகள் மாசு
April 12, 2026, 10:52 am
பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் கைது: போலிஸ்
April 12, 2026, 10:51 am
கைதி தப்பியோட்டம்; எல்லை வாயில்களில் போலிஸ் சோதனைகளை பலப்படுத்தியுள்ளது
April 12, 2026, 10:23 am
நகர்ப்புற தொகுதிகளே கைரி ஜமாலுடின் போட்டியிட பொருத்தமானவை: ஆய்வாளர்கள்
April 12, 2026, 10:21 am
