செய்திகள் மலேசியா
பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் கைது: போலிஸ்
கோலாலம்பூர்:
பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் போலிசார் கைது செய்துள்ளனர்.
சிப்பாங் மாவட்ட போலிஸ் தலைவர் நோர் ஹிசாம் பஹாமான் இதனை கூறினார்.
பண்டார் சன்சூரியாவில் பாதிக்கப்பட்டவரின் இல்லத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், கூர்மையான ஆயுதத்தால் ஒரு பெண்ணைக் குத்தியதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 22 வயதான சந்தேக நபர் சம்பவம் நடந்த அன்றே கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் 34 வயதான பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
அவரது நிலைமை சீராக உள்ளது. மேலும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சந்தேக நபர் அந்தக் குடியிருப்புப் பகுதியில் சமீபத்தில் ஒரு ஏர் பிஎன்பி அறையை வாடகைக்கு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 12:18 pm
சமூக வலைதள நேரலையில் நேர்ந்த விபரீதம்: காரில் இருந்த பெண் மீது தாக்குதல்
April 12, 2026, 11:57 am
சுபாங்கில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண்; மனநல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
April 12, 2026, 11:42 am
தேசிய கோவில் கருத்தரங்கு மகத்தான வெற்றியுடன் இலக்கையும் அடைந்தது: டத்தோ சிவக்குமார்
April 12, 2026, 11:40 am
14 மணி நேரம் இடைவிடாது கணிதப் பாடத்தை போதித்து ஆசிரியர் ஹனஹான் ஆசியான் விருது வென்றார்
April 12, 2026, 11:34 am
மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து: பன்றிப் பண்ணைக் கழிவுகளால் சிலாங்கூர் ஆறுகள் மாசு
April 12, 2026, 10:51 am
கைதி தப்பியோட்டம்; எல்லை வாயில்களில் போலிஸ் சோதனைகளை பலப்படுத்தியுள்ளது
April 12, 2026, 10:23 am
