செய்திகள் மலேசியா
கைதி தப்பியோட்டம்; எல்லை வாயில்களில் போலிஸ் சோதனைகளை பலப்படுத்தியுள்ளது
சுங்கைபூலோ:
கடந்த வியாழக்கிழமை சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பிய பாகிஸ்தானிய விசாரணைக் கைதியைக் கண்டுபிடிப்பதற்காக, நாட்டின் அனைத்து எல்லை வாயில்களில் போலிஸ் சோதனைகளை பலப்படுத்தியுள்ளது.
சந்தேக நபரான 24 வயது முகமது ஹசன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவே இந்த பலப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் என்று சுங்கை பூலோ போலிஸ் தலைவர் முகமது ஹபீஸ் முகமது நூர் கூறினார்.
சந்தேக நபரைத் தேடிக் கைது செய்யும் நடவடிக்கை தற்போது பொது நடவடிக்கைப் படை, விமானப் படைத் தளம், உள் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறை ஆகியவற்றின் உதவியுடன் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு தொடர்ந்து பேணப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது.
இருப்பினும், பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். செய்யப்படும் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அவர் கூறினார்.
முன்னதாக ஷாஆலம் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை நடவடிக்கைகளில் கலந்துகொண்ட பிறகு, சந்தேக நபர் மாலை 6 மணிக்கு சுங்கை பூலோ சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் போலிஸ் காவலில் இருந்து தப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 12:18 pm
சமூக வலைதள நேரலையில் நேர்ந்த விபரீதம்: காரில் இருந்த பெண் மீது தாக்குதல்
April 12, 2026, 11:57 am
சுபாங்கில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண்; மனநல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
April 12, 2026, 11:42 am
தேசிய கோவில் கருத்தரங்கு மகத்தான வெற்றியுடன் இலக்கையும் அடைந்தது: டத்தோ சிவக்குமார்
April 12, 2026, 11:40 am
14 மணி நேரம் இடைவிடாது கணிதப் பாடத்தை போதித்து ஆசிரியர் ஹனஹான் ஆசியான் விருது வென்றார்
April 12, 2026, 11:34 am
மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து: பன்றிப் பண்ணைக் கழிவுகளால் சிலாங்கூர் ஆறுகள் மாசு
April 12, 2026, 10:52 am
பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் கைது: போலிஸ்
April 12, 2026, 10:23 am
