செய்திகள் மலேசியா
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் மாணவர்களின் வீழ்ச்சியை கல்வியமைச்சு ஆராய வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் மாணவர்கள் கண்டுள்ள வீழ்ச்சியை கல்வியமைச்சு ஆராய வேண்டும்.
நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
கடந்த 2025ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் அண்மையில் வெளியாகின.
இந்த தேர்வில் அதிகமான மாணவர்கள் 10 ஏ எடுத்து சாதனைபடைத்துள்ளனர். இவ்வேளையில் அம்மாணவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் எஸ்பிஎம் தேர்வில் 10 ஏ எடுத்த அனைத்து மாணவர்களுக்கு மெட்ரிகுலேசன் வாய்ப்பு வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கல்வியமைச்சின் இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன்.
ஆனால் இவ்வாண்டு வெளியான எஸ்பிஎம் தேர்வில் அதிகமான மாணவர்கள் நன்னெறி பாடத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
10 பாடங்களில் மலாய், ஆங்கிலம், அறிவியல், கணிதம் என அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் ஏ எடுத்துள்ளனர்.
ஆனால் நன்னெறி பாடத்தில் மட்டும் அவர்களால் ஏ எடுக்க முடியவில்லை. இதனால் அவர்களின் மெட்ரிகுலேசன் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது.
ஆகையால் கல்வியமைச்சு இவ்விவகாரத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டத்தோ சரவணக்குமார் கேட்டு கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 12:18 pm
சமூக வலைதள நேரலையில் நேர்ந்த விபரீதம்: காரில் இருந்த பெண் மீது தாக்குதல்
April 12, 2026, 11:57 am
சுபாங்கில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண்; மனநல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
April 12, 2026, 11:42 am
தேசிய கோவில் கருத்தரங்கு மகத்தான வெற்றியுடன் இலக்கையும் அடைந்தது: டத்தோ சிவக்குமார்
April 12, 2026, 11:40 am
14 மணி நேரம் இடைவிடாது கணிதப் பாடத்தை போதித்து ஆசிரியர் ஹனஹான் ஆசியான் விருது வென்றார்
April 12, 2026, 11:34 am
மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து: பன்றிப் பண்ணைக் கழிவுகளால் சிலாங்கூர் ஆறுகள் மாசு
April 12, 2026, 10:52 am
பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் கைது: போலிஸ்
April 12, 2026, 10:51 am
கைதி தப்பியோட்டம்; எல்லை வாயில்களில் போலிஸ் சோதனைகளை பலப்படுத்தியுள்ளது
April 12, 2026, 10:23 am
