செய்திகள் மலேசியா
14 மணி நேரம் இடைவிடாது கணிதப் பாடத்தை போதித்து ஆசிரியர் ஹனஹான் ஆசியான் விருது வென்றார்
ஷாஆலம்:
மலேசியாவில் புகழ்பெற்ற கணித ஆசிரியர்களில் ஒருவரான ஜனஹான் ஆறுமுகம் ஒரே நேரத்தில் இரட்டை விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
Pusat Tusyen Arena Matriks மையத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் ஜனஹான் ஆறுமுகத்திற்கு நேற்று நடைபெற்ற விழாவில் இரண்டு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி ஆன்லைன் மூலமாக 1,200 மாணவர்களுக்கு 14 மணி நேரம் 30 நிமிடங்கள் இடைவிடாது கணிதம் பாடத்தை போதித்து தந்தார் ஆசிரியர் ஜனஹான்.
கணிதம் அமர்வில் தொடர்ச்சியாக அதிகமாக மாணவர்கள் பங்கேற்பாளர்கள் என்ற சாதனையை ஆசியான் நாடுகளில் இவர் ஏற்படுத்தினார்.
இந்த சாதனைக்காக அவருக்கு ஆசியான் சாதனையாளர் விருதை Asian Record's நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Eldrick Koh வழங்கி சிறப்பித்தார்.
மேலும் இந்த நிறுவனத்தின் சார்பில் இளம் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இவருக்கு ஒரு நேரத்தில் இரண்டு சாதனையாளர் விருது வழங்கப்பட்ட போது மாணவர்கள் பெரும் உற்சாகத்தில் திளைத்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 1:08 pm
நெகிரி செம்பிலான் நெருக்கடி மாநில அரசியலமைப்பிற்குத் திரும்ப வேண்டும்: அஸாலினா
September 23, 2026, 1:07 pm
சுங்கை ஊஜோங் உண்டாங் மாளிகையில் பாதுகாப்பை போலிஸ் பலப்படுத்தியது: ஊடகங்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன
September 23, 2026, 1:07 pm
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு எதிரான அவதூறு அறிக்கையை அவாங் ஹஷிம் திரும்பப் பெற்றார்
September 23, 2026, 1:06 pm
குறைந்த ஊதியப் பிரச்சினையை 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை கவனத்தில் கொள்ள வேண்டும்: சார்லஸ் சந்தியாகோ
September 23, 2026, 11:51 am
புகாரளித்து, ஊழலை நிராகரியுங்கள்: 652 அரசு ஊழியர்களுக்கு 1.18 மில்லியன் ரிங்கிட் வெகுமதி
September 23, 2026, 11:49 am
போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்த மலேசியாவும் சீனாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
September 23, 2026, 11:48 am
சரவாக்கில் 13 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுபடுத்தும் குறியீடு பதிவாகியுள்ளது
September 23, 2026, 11:46 am
