செய்திகள் மலேசியா
சுற்றுலாப் பயணிகளுக்கான நிபந்தனைகளில் தோல்வி: புக்கிட் காயு ஹித்தாம் எல்லையில் 28 பேருக்கு அனுமதி மறுப்பு
புக்கிட் காயு ஹித்தாம்:
மலேசியாவின் எல்லைப் பாதுகாப்பு முகமை, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நேற்று வரை புக்கிட் காயு ஹித்தாம் எல்லைச் சாவடி வழியாக நாட்டிற்குள் நுழைய முயன்ற 28 வெளிநாட்டினரின் வருகையை நிராகரித்துள்ளது.
குடிவரவுத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 14 பேரும், தாய்லாந்து, வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
முறையான திரும்பும் பயணச் சீட்டு இல்லாதது, பயணத்திற்கான சரியான காரணத்தைக் கூறத் தவறியது, குடிவரவுத் துறையின் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது போன்ற காரணங்களால் இவர்களது நுழைவு மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாஸ்போர்ட் சேதமடைந்திருந்த ஐந்து தாய்லாந்து நாட்டினரும், தரைவழிப் பாதையைப் பயன்படுத்த அனுமதி இல்லாத இரண்டு வங்கதேச நாட்டினரும் எல்லையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
சட்டத்திற்குப் புறம்பாகவோ அல்லது விதிகளை மீறியோ எவரும் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க எல்லைக் கட்டுப்பாடு தொடர்ந்து பலப்படுத்தப்படும் என எல்லைப் பாதுகாப்புப் படைத் தளபதி மூத்த உதவி ஆணையர் பெளசி முஹம்மத் யூசோப் தெரிவித்துள்ளார்.
நாட்டின் குடிவரவு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்த முயலும் எவருக்கும் எதிராகத் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும், தகுதியான பயணிகள் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 12:18 pm
சமூக வலைதள நேரலையில் நேர்ந்த விபரீதம்: காரில் இருந்த பெண் மீது தாக்குதல்
April 12, 2026, 11:57 am
சுபாங்கில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண்; மனநல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
April 12, 2026, 11:42 am
தேசிய கோவில் கருத்தரங்கு மகத்தான வெற்றியுடன் இலக்கையும் அடைந்தது: டத்தோ சிவக்குமார்
April 12, 2026, 11:40 am
14 மணி நேரம் இடைவிடாது கணிதப் பாடத்தை போதித்து ஆசிரியர் ஹனஹான் ஆசியான் விருது வென்றார்
April 12, 2026, 11:34 am
மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து: பன்றிப் பண்ணைக் கழிவுகளால் சிலாங்கூர் ஆறுகள் மாசு
April 12, 2026, 10:52 am
பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் கைது: போலிஸ்
April 12, 2026, 10:51 am
கைதி தப்பியோட்டம்; எல்லை வாயில்களில் போலிஸ் சோதனைகளை பலப்படுத்தியுள்ளது
April 12, 2026, 10:23 am
