நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நகர்ப்புற தொகுதிகளே கைரி ஜமாலுடின் போட்டியிட பொருத்தமானவை: ஆய்வாளர்கள்

கோலாலம்பூர்:

வரவிருக்கும் தேர்தலில் கைரி ஜமாலுடின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நகரங்கள் அல்லது பகுதி நகர்ப்புற தொகுதிகளே அவருக்கு மிகவும் பொருத்தமானவை.

கடந்த தேர்தலில் அவரின் செயல்பாட்டின் அடிப்படையில், மலாய்,  கலப்புப் பகுதிகளில் கைரியால் ஆதரவைத் திரட்ட முடியும் என்று மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மஸ்லான் அலி கூறினார்.

கைரி 2008 முதல் 2022 வரை ரெம்பாவ் நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாக இருந்தார்.

15ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ கட்சி கைரியை சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது.

அதில் அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் (50,943), தேசியக் கூட்டணி வேட்பாளர் (29,060) மற்றும் நான்கு பிற கட்சிகளுடன் ஒப்பிடும்போது, ​​கைரி 48,250 வாக்குகளைப் பெற்றார்.

கைரியின் ஓரளவு முற்போக்கு அரசியல்வாதி என்ற பிம்பம், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

அதிக முற்போக்கு மலாய்க்காரர்கள் அல்லது கலப்பு மக்கள் வசிக்கும் பகுதிகளில் போட்டியிட கைரி பொருத்தமானவர்.

கடந்த பொதுத் தேர்தலைப் பாருங்கள், சுங்கை பூலோவில் அவர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனை கிட்டத்தட்ட நெருங்கியுள்ளார் என்று அவர் கூறினார்.

கைரி ஜமாலுடின் போட்டியிட மிகவும் பொருத்தமான தொகுதி எது என்பது தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset