செய்திகள் மலேசியா
பள்ளிக்கு முன் நடந்த சண்டையைத் தொடர்ந்து 15 பேரை போலிசார் கைது செய்தனர்
ஸ்கூடாய்:
ஜொகூர் பாருவின் ஸ்கூடாய் பகுதியில் உள்ள பண்டார் செலசா ஜெயா பகுதியில் ஒரு இடைநிலைப் பள்ளிக்கு முன் நடந்த சண்டை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, போலிசார் 15 பேரைக் கைது செய்தனர்.
இஸ்கந்தர் புத்ரி மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி எம். குமரேசன் இதனை கூறினார்.
நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்துத் தமக்குத் தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து 12 முதல் 37 வயதுக்குட்பட்ட 13 சிறுவர்கள், இரண்டு உள்ளூர் பெண்கள் உட்பட அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அவர்கள் நேற்று இரவு 3 மணி முதல் 11.11 மணிக்குள் நுசா பெஸ்தாரி, இஸ்கண்டார் புத்ரி பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் கன்னத்தில் அறையப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியே, பள்ளி நேரம் முடிந்த பிறகு நடந்த சண்டைக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களுக்கான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்றக் போலிஸ் மனு, இன்று முதல் மூன்று நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அனைத்து சிறுவர்களும் ஏப்ரல் 14 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குமரேசன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 11:42 am
தேசிய கோவில் கருத்தரங்கு மகத்தான வெற்றியுடன் இலக்கையும் அடைந்தது: டத்தோ சிவக்குமார்
April 12, 2026, 11:40 am
14 மணி நேரம் இடைவிடாது கணிதப் பாடத்தை போதித்து ஆசிரியர் ஹனஹான் ஆசியான் விருது வென்றார்
April 12, 2026, 11:34 am
மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து: பன்றிப் பண்ணைக் கழிவுகளால் சிலாங்கூர் ஆறுகள் மாசு
April 12, 2026, 10:52 am
பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் கைது: போலிஸ்
April 12, 2026, 10:51 am
கைதி தப்பியோட்டம்; எல்லை வாயில்களில் போலிஸ் சோதனைகளை பலப்படுத்தியுள்ளது
April 12, 2026, 10:23 am
