செய்திகள் மலேசியா
அமிருல் மரணத்தில் குற்றக் கூறுகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அரசு சமரசம் செய்து கொள்ளாது: துணைப் பிரதமர்
கோலாலம்பூர்:
கடந்த மாதம் ஒரு கார்ப்பரலால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் இராணுவ பயிற்சி வீரரான சிப்பாய் முஹம்மது அமிருல் ரசிக்கின் மரணத்தில் குற்றக் கூறுகள் சம்பந்தப்பட்டிருந்தால் அதில் அரசு சமரசம் செய்துகொள்ளாது.
இந்த விஷயத்தை அரசு தீவிரமாகக் கருதுகிறது. இவ்விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதையும் உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.
ஒழுங்கு நடவடிக்கையை தன்னிச்சையாக எடுக்க முடியாது. குறிப்பாக அது உடல்ரீதியான துன்புறுத்தலை உள்ளடக்கியதாக இருக்கக் கூடாது.
அனைத்து தரப்பினரும் வகுக்கப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
தற்போதுள்ள வழிகாட்டுதல்களுக்கு அப்பாற்பட்ட முறைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று அவர் இன்று இரவு ஜெலுபு நாடாளுமன்றத்தின் பெருநாள் திறந்த இல்ல நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினரும், நெகிரி செம்பிலானின் மூத்த செயற்குழு உறுப்பினருமான டத்தோஶ்ரீ ஜலாலுடின் அலியாஸ் உடனிருந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 11:42 am
தேசிய கோவில் கருத்தரங்கு மகத்தான வெற்றியுடன் இலக்கையும் அடைந்தது: டத்தோ சிவக்குமார்
April 12, 2026, 11:40 am
14 மணி நேரம் இடைவிடாது கணிதப் பாடத்தை போதித்து ஆசிரியர் ஹனஹான் ஆசியான் விருது வென்றார்
April 12, 2026, 11:34 am
மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து: பன்றிப் பண்ணைக் கழிவுகளால் சிலாங்கூர் ஆறுகள் மாசு
April 12, 2026, 10:52 am
பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் கைது: போலிஸ்
April 12, 2026, 10:51 am
கைதி தப்பியோட்டம்; எல்லை வாயில்களில் போலிஸ் சோதனைகளை பலப்படுத்தியுள்ளது
April 12, 2026, 10:23 am
நகர்ப்புற தொகுதிகளே கைரி ஜமாலுடின் போட்டியிட பொருத்தமானவை: ஆய்வாளர்கள்
April 12, 2026, 10:21 am
