நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய கோவில் கருத்தரங்கு மகத்தான வெற்றியுடன் இலக்கையும் அடைந்தது: டத்தோ சிவக்குமார்

ரந்தாவ்:

தேசிய கோவில் கருத்தரங்கு மகத்தான வெற்றியுடன் இலக்கையும் அடைந்தது என்று மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார்  கூறினார்.

கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம், மஹிமா, கியூமிக் ஒருங்கிணைப்பில் தேசிய கோவில் கருத்தரங்கு பத்துமலையில் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்டோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டர்.

தேசிய நிலச் சட்டம், நகர, கிராம திட்டமிடல் சட்டத்தை ஆலய நிர்வாகங்கள் புரிந்து கொள்ளும் நோக்கில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

200க்கும் மேற்பட்ட ஆலயங்கள் புதியதாக மஹிமாவில் இணைந்து கொண்டன. அதே வேளையில் மஹிமாவின் கீழ் ஆலோசணை மன்றம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

அடுத்து இக்கருத்தரங்கு நாடு முழுவதும் நடத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வகையில் அவ்வகையில் இந்த கருத்தரங்கு வெற்றிகரமான நிகழ்ச்சியாக அமைந்தது.

ரந்தாவ் பேபி சிவன் ஆலயத்தில் 52 அடி உயர சிவப் பெருமான் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட டத்தோ சிவக்குமார் இவ்வாறு கூறினார்.

ரந்தாவ் கம்போங் உலு சாவா ஸ்ரீ சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயத்தில் வால் முனீஸ்வரர் சிவபெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் விழா இன்று காலை சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் ஸ்தாபகர் அப்பா முருகவேல் ஒவ்வொரு முறையும் பல புதுமைகளை செய்து வருகிறார்.

ஆகவே நேரம் கிடைக்கும் போது பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வர வேண்டும் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset