செய்திகள் மலேசியா
எஸ் பி எம் (SPM) தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி, ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது: டத்தோ அஸ்லிண்டா அஸ்மான்
சிண்டோக்:
எஸ் பி எம் (SPM) தேர்வர்கள் UPUOnline மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி, ஏப்ரல் 13 ஆம் தேதி நண்பகல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
"இன்னும் விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம், கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம்" என்று உயர்கல்வித் துறை தலைமை இயக்குநர் டத்தோ பேராசிரியர் அஸ்லிண்டா அஸ்மான் கூறினார்.
"முதலில் ஏப்ரல் 12 (நாளை) மாலை 5 மணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த விண்ணப்பக் காலக்கெடு, திங்கட்கிழமை நண்பகல் வரை நீட்டிக்கப்படுவதற்கு உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சம்ப்ரி அப்துல் காதிர் ஒப்புக்கொண்டுள்ளார்," என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள உத்தாரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜோம் மசுக் யுனிவர்சிட்டி 2026 திருவிழா (வடக்கு மண்டலம்) நிகழ்ச்சியில் ஆற்றிய தனது உரையில் அவர் இதைத் தெரிவித்தார்.
அஸ்லிண்டாவின் கூற்றுப்படி, SPM சான்றிதழ் பெற்றவர்களுக்கான பிரிவில் UPUOnline வழியாக மொத்தம் 238,524 விண்ணப்பங்களும், எஸ் டி பி எம் STPM அல்லது அதற்கு இணையான பிரிவில் 112,488 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
UPUOnline PIN எண்ணை வாங்கிய 379,578 விண்ணப்பதாரர்களில், இதன் மூலம் மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 351,012 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
"உயர்கல்வியைத் தொடர்வதில் இளைய தலைமுறையினரிடையே உள்ள வலுவான ஆர்வத்தையும் நம்பிக்கையையும் இந்த எண்ணிக்கை தெளிவாகக் காட்டுகிறது" என்று அவர் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 3:17 pm
திரங்கானுவில் வறுமையை ஒழிப்பதற்காக இந்த ஆண்டு ரிம60 மில்லியன் ஒதுக்கப்படுகிறது
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 2:43 pm
வழக்கறிஞர் அலுவலகத்தில் பற்றி எரிந்த தீ: 70 சதவீத கட்டிடம் சேதம்
April 13, 2026, 2:34 pm
கடலில் குதித்து தப்பிய கும்பல்: RM10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு
April 13, 2026, 2:11 pm
மிகவும் சிக்கலான அந்நியத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: நூருல் இசா
April 13, 2026, 2:10 pm
சாத்தியமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தயாராக இருங்கள்; ஆனால் பீதியடைய வேண்டாம்: சைபுடின்
April 13, 2026, 2:09 pm
மதுபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகள்; மரணத் தண்டனை தேவையில்லை: அந்தோனி லோக்
April 13, 2026, 2:08 pm
