செய்திகள் மலேசியா
சாத்தியமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தயாராக இருங்கள்; ஆனால் பீதியடைய வேண்டாம்: சைபுடின்
புத்ராஜெயா:
சாத்தியமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
ஆனால் பீதியடைய வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.
உலகளாவிய மோதலால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்திற்கு, பீதியையோ அல்லது அலட்சியத்தையோ ஏற்படுத்தாமல் மக்களைத் தயார்படுத்துவதில் அரசாங்கம் ஒரு பெரும் சவாலை எதிர்கொள்கிறது.
தற்போதைய நிலையில், மக்களுக்குச் சொல்லப்படும் செய்தியானது யதார்த்தமாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது.
அதே நேரத்தில் அதீத கவலையை ஏற்படுத்தாத வகையிலும் சமநிலைப்படுத்துவதே மிகவும் கடினமான அணுகுமுறையாகும்.
மக்கள் பீதியான நிலையில் இருப்பதை அரசாங்கம் விரும்பவில்லை.
அதே நேரத்தில் உலகளாவிய நிலைமை நாட்டைப் பாதிக்காது என்பது போன்ற ஒரு மறுப்பு மனப்பான்மை நிலவுவதையும் அது விரும்பவில்லை.
இங்கு பிரதான அரசாங்கத்திற்கான சவால் என்னவென்றால், துன்பம் வரப்போகிறது என்ற உண்மையை மக்கள் ஏற்றுக்கொள்ள நாங்கள் அவர்களைத் தயார்படுத்த விரும்புகிறோம்.
ஆனால், மக்கள் பீதியடைவதை நாங்கள் விரும்பவில்லை.
அதே நேரத்தில், மக்கள் அலட்சியமாக இருப்பதையும் நாங்கள் விரும்பவில்லை.
இன்று காலை, உள்துறை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தையொட்டி ஆற்றிய உரையில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 3:44 pm
30 எரிவாயு சிலிண்டர்களைக் கடத்த முயன்ற சரக்கு படகு ஓட்டுநர் அதிகாலையில் கைது செய்யப்பட்டார்
April 13, 2026, 3:17 pm
திரங்கானுவில் வறுமையை ஒழிப்பதற்காக இந்த ஆண்டு ரிம60 மில்லியன் ஒதுக்கப்படுகிறது
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 2:43 pm
வழக்கறிஞர் அலுவலகத்தில் பற்றி எரிந்த தீ: 70 சதவீத கட்டிடம் சேதம்
April 13, 2026, 2:34 pm
கடலில் குதித்து தப்பிய கும்பல்: RM10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு
April 13, 2026, 2:11 pm
மிகவும் சிக்கலான அந்நியத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: நூருல் இசா
April 13, 2026, 2:09 pm
மதுபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகள்; மரணத் தண்டனை தேவையில்லை: அந்தோனி லோக்
April 13, 2026, 2:08 pm
