செய்திகள் மலேசியா
தெலுக் இந்தான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது
தெலுக் இந்தான்:
தெலுக் இந்தான் 12ஆவது மைல் ஜாலான் பீடோர் சாலையில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா
கோலாகலமாக நடைபெற்றது
மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழாவைக் காண பெரும் திரளான மக்கள் திரண்டிருந்தனர் .
இவ்விழாவிற்கு பேரா மாநில ஆட்சிக் குழு டத்தோ அ. சிவநேசனை பிரதிநிதித்து மாநில இந்து சங்கத் தலைவர் பொன். சந்திரன் கலத்துக் கொண்டார்.
இவ்விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். சந்திரன்,
பேரா மாநிலத்தில் எதிர்நோக்கிய ஆலய நில விவகாரங்களுக்கு படிப்படியாக தீர்வுக்காணப்பட்டு வருகிறது.
இந்த ஆலய விவகாரங்களுக்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறார்.
ஆக தொடர்ந்து ஆலய நிர்வாகங்கள் எதிர்காலத்தில. எந்தப் பிரச்சனைகள் இன்றி வழி நடத்த முறையே சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆலயங்களை நிர்மாணிக்க அரசு எந்த தடையும் விதிக்கவில்லை, அவைகளை நிர்மாணிக்க முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த ஆலய மகா கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினர்களுக்கும்ஆலய நிர்வாகம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 3:44 pm
30 எரிவாயு சிலிண்டர்களைக் கடத்த முயன்ற சரக்கு படகு ஓட்டுநர் அதிகாலையில் கைது செய்யப்பட்டார்
April 13, 2026, 3:17 pm
திரங்கானுவில் வறுமையை ஒழிப்பதற்காக இந்த ஆண்டு ரிம60 மில்லியன் ஒதுக்கப்படுகிறது
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 2:43 pm
வழக்கறிஞர் அலுவலகத்தில் பற்றி எரிந்த தீ: 70 சதவீத கட்டிடம் சேதம்
April 13, 2026, 2:34 pm
கடலில் குதித்து தப்பிய கும்பல்: RM10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு
April 13, 2026, 2:11 pm
மிகவும் சிக்கலான அந்நியத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: நூருல் இசா
April 13, 2026, 2:10 pm
சாத்தியமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தயாராக இருங்கள்; ஆனால் பீதியடைய வேண்டாம்: சைபுடின்
April 13, 2026, 2:09 pm
