நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய ஹஜ் பயணிகளுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக 141 ஹஜ் பணியாளர்கள் இன்று புனிதபூமிக்கு புறப்பட்டனர் 

புத்ரா ஜெயா:

மலேசிய ஹஜ் பயணிகளுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக, தபோங் ஹாஜியின் ஊழியர்களும் (TH), சுகாதார அமைச்சகத்தின் (MOH) பணியாளர்களும் மொத்தம் 141 ஹஜ் பணியாளர்கள் இன்று சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டனர்.

இந்த ஆண்டு 31,600 ஹஜ் பயணிகளின் வருகைக்கு முன்னதாக ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக, இந்தப் பணியாளர்கள் முதல் குழுவாகச் செல்கின்றனர் என்று பிரதமரின் துறையின் இஸ்லாமிய சமய விவகார அமைச்சர் சுல்கிஃப்லி ஹசன் கூறினார்.

"ஹஜ் பணியாளர்களின் முதல் குழுவில் 61 நல அலுவலர்களும் 80 மருத்துவப் பணியாளர்களும் அடங்குவர். 107 பணியாளர்களைக் கொண்ட இரண்டாவது குழு ஏப்ரல் 15 அன்று புறப்படும்," என்று, இன்று இங்கு நடைபெற்ற ஹஜ் பணியாளர்களின் முதல் குழுவிற்கான வழியனுப்பு விழாவிற்குப் பிறகு அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பயிற்சி, தலைமைத்துவம் மற்றும் பாடநெறிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆண்டு தபோங் ஹாஜி மிகவும் முழுமையான தயாரிப்புகளைச் செய்துள்ளது என்று சுல்கிஃப்லி கூறினார்.

"பல்வேறு பின்னணிகள், நிபுணத்துவம், அனுபவங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் குழு, நாட்டின் ஹஜ் யாத்ரீகர்களுக்கு சிறந்த சேவையை வழங்கக்கூடிய ஒரு வலுவான பிரிவாக உருவாகியுள்ளது," என்று அவர் கூறினார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset