செய்திகள் மலேசியா
உலகளாவிய பொருளாதார நெருக்கடி: சிறு, நடுத்தர தொழில்களைக் காப்பாற்ற 5 நடவடிக்கைகளைக் குவான் எங் முன்மொழிகிறார்
கோலாலம்பூர்:
நாடு தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வேளையில், உள்ளூர் நுண், சிறு, நடுத்தர தொழில்களை (பி.எம்.கே.எஸ்.) காப்பாற்ற, அரசாங்கம் ஐந்து குறுகிய கால நிதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டிஏபி ஆலோசகர் லிம் குவான் எங் பரிந்துரைத்துள்ளார்.
அந்த நடவடிக்கைகளில், 100,000 பி.எம்.கே.எஸ்.களுக்கு ரிம50,000 வீதம், மொத்தம் ரிம5 பில்லியன் மதிப்பில், வட்டி, பிணையில்லா கடன்களை வழங்குவதும் அடங்கும்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், கடந்த புதன்கிழமை பாக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் கூட்டத்தில், அந்தப் பரிந்துரைக் கடிதத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமிடம் சமர்ப்பித்ததாகக் கூறினார்.
இன்று ஒரு அறிக்கையில் தான் பகிர்ந்து கொண்ட அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையில், மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் எண்ணெய் விலைகளை வெகுவாக உயர்த்தியதைத் தொடர்ந்து, 1.1 மில்லியன் பி.எம்.கே.எஸ்.-கள் எதிர்கொள்ளும் பிரச்சினையைக் குவான் எங் குறிப்பிட்டார்.
அந்தக் கடிதத்தில், முன்னாள் நிதி அமைச்சர், பி.எம்.கே.எஸ்.-களின் சுமை செலவுகளைக் குறைப்பதற்கும், வணிகத்தை உருவாக்குவதற்கும் அரசாங்கமே நம்பிக்கை என்று கூறினார். இதன்மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்கள் வணிகத்தை மூட வேண்டிய நிலை ஏற்படாமல் தடுக்க முடியும் என்றார் அவர்.
மேலும் விளக்குகையில், மற்ற பரிந்துரைகள், நிதி நிறுவனங்களிடமிருந்து தற்போதுள்ள கடன்களுக்கான வட்டி செலுத்துதல்களை இந்த ஆண்டு இறுதி வரை இடைநிறுத்தி வைப்பதும் ஆகும் என்றார்.
அடுத்ததாக, கூடுதல் வரிகளைச் செயல்படுத்துவதில் இடைநிறுத்தம், இணக்கச் செலவுகள், ஒழுங்குமுறைகளை விரிவுபடுத்துதல். கடந்த ஆண்டு இறுதியில் இருந்து அமலில் உள்ள விற்பனை, சேவை வரி (SST) உயர்வு, மின்-விலைப்பட்டுவாடாக்கள் (இ-இன்வாய்ஸ்), வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமிப்பு நிதியத்திற்கு (KWSP) இரண்டு சதவீத பங்களிப்பு ஆகியவற்றை நிறுத்தி வைப்பது இதில் அடங்கும்.
"கூடுதலாக, உள்ளூர் சந்தையில் கிடைக்காவிட்டால் தவிர, அனைத்து உள்ளூர், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தங்கள் விநியோக ஆதாரங்களில் 50 சதவீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த வேன்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
"ஐந்தாவதாக, இந்த நெருக்கடிக் காலத்தில், அதிகாரத்துவத்தையும் கடுமையான அமலாக்கத்தையும் தளர்த்துவதாகும்" என்று அவர் கூறினார்.
மூலப் பொருட்களின் விலைகளில் ஏற்ற இறக்கம் அல்லது நிச்சயமற்ற தன்மை, விநியோகச் சங்கிலி அழுத்தங்கள், இடையூறுகள், விநியோக தளவாடச் செலவுகளில் உயர்வு ஆகியவற்றைத் தவிர, பி.எம்.கே.எஸ்.-கள் தற்போது பணப்புழக்க சிக்கல்களையும் எதிர்கொள்வதாக குவான் எங் தெரிவித்தார்.
"மூலப் பொருள் விநியோகர்கள் ஒன்று முதல் மூன்று மாத கடன் அல்லது கடன் நிபந்தனைகளை வழங்க மறுக்கிறார்கள். மாறாக, பண அடிப்படையில் வணிகப் பரிவர்த்தனைகளை நடத்த விரும்புகிறார்கள்.
"மூலப் பொருட்கள் இல்லாமல், பி.எம்.கே.எஸ்.-களால் தங்கள் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாது. இது ஏற்கனவே வெகுவாக உயர்ந்துள்ள பிற செலவுகளுக்கு நிதியளிக்க வேண்டிய பல பி.எம்.கே.எஸ்.-களின் நிதி நிலைமையைக் கடினமாக்குகிறது" என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 3:17 pm
திரங்கானுவில் வறுமையை ஒழிப்பதற்காக இந்த ஆண்டு ரிம60 மில்லியன் ஒதுக்கப்படுகிறது
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 2:43 pm
வழக்கறிஞர் அலுவலகத்தில் பற்றி எரிந்த தீ: 70 சதவீத கட்டிடம் சேதம்
April 13, 2026, 2:34 pm
கடலில் குதித்து தப்பிய கும்பல்: RM10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு
April 13, 2026, 2:11 pm
மிகவும் சிக்கலான அந்நியத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: நூருல் இசா
April 13, 2026, 2:10 pm
சாத்தியமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தயாராக இருங்கள்; ஆனால் பீதியடைய வேண்டாம்: சைபுடின்
April 13, 2026, 2:09 pm
மதுபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகள்; மரணத் தண்டனை தேவையில்லை: அந்தோனி லோக்
April 13, 2026, 2:08 pm
