நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்.ஆர்.டி ரயிலில் பாலியல் தொல்லை வழக்கில் வெளிநாட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்

கோலாலம்பூர்: 

சமீபத்தில் எல்.ஆர்.டி ரயிலில் நடந்த பாலியல் தொல்லை வழக்கில் சந்தேக நபர் ஒருவர், பிரசரானா உதவிப் போலிஸ் குழுவினரால் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டார்.

ஏப்ரல் 8 ஆம் தேதி ஒரு சாட்சி புகார் அளித்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில், 19 வயதுடைய அந்த வெளிநாட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என ரேபிட் ரெயில் தெரிவித்தது.

கிளானா ஜெயா எல்.ஆர்.டி ரயிலில் ஒரு பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

"ஆரம்பக் கட்ட விசாரணையில், புத்ராஜெயா பாதையில் உள்ள கூச்சாய் நிலையத்தில் நடந்த மற்றொரு பாலியல் தொல்லை வழக்கிலும் சந்தேக நபர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

"சந்தேக நபர், மேலதிக நடவடிக்கைக்காக ஸ்ரீ பெட்டாலிங் போலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணை செயல்முறைக்கு உதவும் வகையில், ரேபிட் ரெயில் அரச மலேசிய போலிஸாருக்கு முழு ஒத்துழைப்பை வழங்கும்" என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், ரேபிட் கேஎல் ரயில் சேவைகளின் ஆபரேட்டரான ரேபிட் ரெயில், எந்தவொரு பாலியல் தொல்லையையும் கண்டால் அல்லது அதற்கு ஆளானால், பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் வகையில், அனைத்து பயனர்களும் நிலைய அதிகாரிகளுக்கோ அல்லது பணியில் உள்ள பிரசரானா உதவிப் போலிஸ் உறுப்பினர்களுக்கோ உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset