செய்திகள் இந்தியா
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
சிக்கமகளூரு:
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சந்திரத்ரோணா மலைத்தொடருக்குச் சுற்றுலா சென்ற கேரளாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீநந்தனா (16) மாயமானார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலிருந்து சுமார் 40 உறவினர்களுடன் வந்திருந்த அந்த மாணவி, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 'மாணிக்யதாரா' நீர்வீழ்ச்சி அருகே சென்றபோது திடீரென காணாமல் போயுள்ளார். குடும்பத்தினர் நீண்ட நேரம் தேடியும் மாணவி கிடைக்காததைத் தொடர்ந்து, இரவு 8 மணியளவில் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஜித்தேந்திர குமார் தயாமா தலைமையில் காவல்துறை, வனத்துறை, தீயணைப்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அடர்ந்த மூடுபனி, சவாலான மலைப்பகுதி என்பதால் தேடுதல் பணியில் சுணக்கம் ஏற்பட்ட போதிலும், ட்ரோன்களைப் பயன்படுத்தி தேடுதல் நடத்தப்பட்டது. மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும் தற்போது இந்தத் தேடுதல் பணியில் இணைந்துள்ளனர்.
அண்மையில் குடகு மாவட்டத்தின் தடியண்டமோல் மலைப்பகுதியில் கேரளாத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் சரண்யா என்பவர் மாயமாகி, 72 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், தற்போது அதே மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மாயமாகியிருப்பது சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே மாணவியைத் தேடும் பணியில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிட்டுள்ளார். மாணவியின் அலைபேசி அழைப்பு விவரங்களை வைத்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
