நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புந்தோங் கொலைச் சம்பவம்: விசாரணைக்கு உதவும் வகையில் மேலும் 3 இளைஞர்கள் போலீசாரால் கைது

ஈப்போ: 

புந்தோங் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு உதவும் வகையில் மேலும் மூன்று உள்ளூர் ஆண்களைப் போலிசார் கைது செய்துள்ளனர். 

நேற்று மாலை 5:30 மணியளவில் புந்தோங் பொதுச் சந்தைப் பகுதியில் ஈப்போ மாவட்டக் குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் இவர்கள் பிடிபட்டனர். 28 முதல் 34 வயதுக்குட்பட்ட இந்த மூன்று சந்தேக நபர்களும், வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு 11:10 மணியளவில், ஒரு கும்பலால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் சாலை ஓரத்தில் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஏழு நாட்கள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

இருப்பினும், உண்மையான காரணத்தைக் கண்டறியப் போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாகக் கொலை, கடுமையான காயம் ஏற்படுத்துதல், கலவரம் செய்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset