செய்திகள் மலேசியா
எல்லைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் போலிசாரை பணியமர்த்துவது குறித்து அமைச்சரவை பரிசீலித்து வருகிறது: ஃபஹ்மி
புத்ராஜெயா:
நாட்டின் எல்லைகளுக்கு அருகிலுள்ள பெட்ரோல் நிலையங்களில் போலிசாரை பணியமர்த்துவது குறித்து அமைச்சரவை பரிசீலித்து வருகிறது.
மடானி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
எல்லைப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பல கைதுகள் மேற்கொள்ளப்பட்டது குறித்து உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விவாதம் நடைபெற்றது.
குறிப்பாக நாட்டின் எல்லைப்புறங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட கைதுகளின் விளைவாக, பாதுகாப்பு தொடர்பான பல அம்சங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது.
எல்லைப்புறங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, பாதுகாப்புப் பணியாளர்கள், குறிப்பாக போலிஸ் அதிகாரிகளின் இருப்புக்கான தேவையை அமைச்சரவை பரிசீலித்து வருகிறது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்த தினசரி செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், மத்திய, மாநில அளவில் பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்க அமைச்சரவை இன்று முடிவு செய்துள்ளதாக ஃபஹ்மி தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 8:36 pm
நஜிப் உட்பட ஒவ்வொரு கைதிக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு: பிரதமர்
September 20, 2026, 8:35 pm
நஜிப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால், 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துவது கடினம்: ஷாபி
September 20, 2026, 8:34 pm
அமைச்சர் பதவியிலிருந்து விலகல்: ஷாங்காயில் இருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக்கை பிரதமர் சந்திக்கிறார்
September 20, 2026, 8:33 pm
ஆசிய விளையாட்டுப் போட்டி: மலேசியாவின் பதக்கக் கணக்கை தேவேந்திரன் தொடங்கினார்
September 20, 2026, 8:32 pm
பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்: டத்தோஸ்ரீ சாரணி
September 20, 2026, 1:22 pm
அம்னோவை எதிர்கொள்ள கூட்டணி அமைப்பதற்காக பெர்சத்து கட்சியை மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன: அஸ்மின்
September 20, 2026, 1:22 pm
