செய்திகள் மலேசியா
செராஸில் பொழுதுபோக்கு மையத்தின் மீது தாக்குதல்; உரிமையாளர் மீதான தனிப்பட்ட பழிவாங்கல், வர்த்தக போட்டிகளே காரணம்: போலிஸ்
கோலாலம்பூர்:
செராஸில் பொழுதுபோக்கு மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உரிமையாளர் மீதான தனிப்பட்ட பழிவாங்கல், வியாபார போட்டிகளே காரணம்.
கோலாலம்பூர் மாவட்ட போலிஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் இதனை கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, செராஸ் அருகே உள்ள தாமான் ஷாமெலினில் ஒரு பொழுதுபோக்கு மையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
சம்பந்தப்பட்ட கிளப் உரிமையாளருக்கும் அவரது வணிகப் போட்டியாளருக்கும் இடையிலான தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாக இது நடத்தப்பட்டது.
நேற்று முதல் நள்ளிரவு வரை போலிசார் நடத்திய நடவடிக்கையின் விளைவாக, இதுவரை 14 முதல் 57 வயதுக்குட்பட்ட இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நண்பகலில் நடந்த இந்தத் தாக்குதல், சம்பந்தப்பட்ட தரப்பினரால் பணியமர்த்தப்பட்ட ஒரு இரகசிய அமைப்பின் உறுப்பினர்களைக் கொண்ட சிலரால் நடத்தப்பட்டது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது கூடுதல் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருந்த மேலும் சில நபர்களையும் நாங்கள் தேடி வருகிறோம் என்று கோலாலம்பூர் போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
