செய்திகள் மலேசியா
"சீனப் போலிஸ் போல வேடமிட்டு மோசடி": தாவாவ் தங்கும் விடுதியில் ரகசியமாக இயங்கிய 80 பேர் கொண்ட கும்பல் சிக்கியது
தவாவ்:
சபா மாநிலத்தின் தவாவ் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ரகசியமாகச் செயல்பட்டு வந்த சர்வதேச இணையவழி மோசடி கும்பலை மலேசியப் போலிசார் அதிரடியாக முறியடித்துள்ளனர்.
நேற்று இரவு 9:20 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், சீனக் காவல்துறையினர் போல வேடமிட்டு மோசடியில் ஈடுபட்ட 80 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 78 பேர் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், மற்ற இருவர் மியான்மர், லாவோஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தக் கும்பல் கடந்த மூன்று மாதங்களாக மலேசியாவிற்குள் தங்கி, அமெரிக்காவில் வாழும் சீன வம்சாவளியினரை இலக்கு வைத்து மோசடி செய்து வந்துள்ளனர்.
தாங்கள் சீனக் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதே இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. சோதனை நடத்தப்பட்ட தங்கும் விடுதியானது இவர்களின் பயிற்சி மையமாகவும், தொலைபேசி அழைப்பு மையமாகவும் செயல்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சோதனையின்போது அங்கிருந்து ஏராளமான கைபேசிகள், கணினிகள், சீனக் காவல்துறையின் சீருடைகள், போலியான ஆவணங்கள், இணையதளக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் 77 பேர் இன்று காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விசாரணைக்காக மூன்று நாட்கள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அங்கிருந்தபடியே அவர்களுக்கும் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையில் ஈடுபட்ட சிலாங்கூர், சபா மாநிலத்தைச் சேர்ந்த வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையினர், பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சபா மாநிலத்தில் வெளிநாட்டினர் தங்கி இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது பாதுகாப்புத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 8, 2026, 5:10 pm
சுங்கைப்பட்டாணியில் பரபரப்பு: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஷாபு போதைப்பொருள் பறிமுதல்
April 8, 2026, 4:55 pm
கோவிலில் மரக்கட்டை விழுந்ததில் இளம் பெண் உயிரிழந்தார்
April 8, 2026, 4:53 pm
ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்க 300 உதவி வார்டன்கள் நியமனம்: ஃபட்லினா
April 8, 2026, 4:51 pm
அமெரிக்கா, ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை வரவேற்கத்தக்கது: பிரதமர்
April 8, 2026, 4:13 pm
