செய்திகள் மலேசியா
சுங்கைப்பட்டாணியில் பரபரப்பு: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஷாபு போதைப்பொருள் பறிமுதல்
சுங்கைப்பட்டாணி:
பெடோங் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில், 'ஷாபு' (Syabu) எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்ததாக இரு பெண்களைக் கோலா மூடா மாவட்டப் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண், நாட்டின் பிரபல நடிகர் ஒருவரின் சகோதரி என நம்பப்படுகிறது. நேற்று மாலை 6:45 மணியளவில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
50, 40 வயது மதிக்கத்தக்க அந்த இரு பெண்களும் தங்கியிருந்த வீட்டின் படுக்கையறையைச் சோதனை செய்தபோது, அங்கிருந்த படுக்கையின் மேல் ஒரு கருப்பு நிற நெகிழிப் பையில் சுற்றப்பட்ட நிலையில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
சுமார் 5.45 கிராம் எடை கொண்ட அந்தப் போதைப்பொருள், சிறிய நெகிழிப் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த இரு பெண்களும் மேலதிக விசாரணைக்காகக் கோலா மூடா மாவட்டப் போலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்திய மாவட்டப் போலிஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ஹன்யன் ரம்லான், 1952-ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் 39(A)1 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கைதானவர்களிடம் இந்தப் போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
