செய்திகள் மலேசியா
அமெரிக்கா, ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை வரவேற்கத்தக்கது: பிரதமர்
புத்ராஜெயா:
ஈரான் முன்வைத்து அமெரிக்கா ஏற்றுக்கொண்ட 10 அம்ச முன்மொழிவைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை பிரதமர் டத்தோஶ்ரீ டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்.
இந்த முன்மொழிவு, பிராந்தியத்தில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுப்பதற்கு ஒரு நேர்மறையான நம்பிக்கையை அளிக்கிறது.
வட்டாரத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகளைக் கண்டறியும் உறுதியான தீர்மானத்துடனும், நல்லெண்ணத்துடனும் பேச்சுவார்த்தை செயல்முறை நடத்தப்படும் என்று நம்பப்படுகிறது.
இந்த செயல்முறை வஞ்சகத்தாலும் ஏமாற்றத்தாலும் சூழப்பட்டிருந்தால், அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறாது.
இந்த 10 அம்சத் திட்டம், ஈரானுக்கு மட்டுமல்லாமல் ஈராக், லெபனான, யேமன் ஆகிய நாடுகளுக்கும் ஒரு விரிவான அமைதி ஒப்பந்தமாக மாற்றப்பட வேண்டும் என்று டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.
பாலஸ்தீனிய மக்களுக்கு, குறிப்பாக காசாவில், எதிரான இனப்படுகொலை மற்றும் நில அபகரிப்புக்கு ஒரு முடிவுகட்டுவதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும்
இந்த சமீபத்திய முன்னேற்றத்தை அடைய உதவிய, அயராத ராஜதந்திர முயற்சிகளுக்காக பாகிஸ்தானுக்கும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கும் பிரதமர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
