செய்திகள் மலேசியா
சொக்சோ வைரலான வழக்குகளை மட்டும் கவனிப்பதில்லை; 2022 முதல் 31,600 விபத்து வழக்குகளுக்கு உதவிகளை வழங்கியுள்ளது: அஸ்மான்
கோலாலம்பூர்:
விபத்து பாதிக்கப்பட்டவர்கள், வாரிசுகளுக்கான உதவியானது வைரலான வழக்குகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை.
2022 முதல் மார்ச் 2026 வரை நாடு முழுவதும் 31,600க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு ஆதரவளித்துள்ளது.
உதவி வழங்கும் செயல்முறையானது ஒழுங்கமைக்கப்பட்ட, விரிவான முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக, தனது அமைப்பு போலிஸ், பல பிற முகமைகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக சொக்சோ தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஶ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் கூறினார்.
சமூக ஒருங்கிணைப்புத் திட்டத்தின் மூலம் 121 தொடர்புடைய முகமைகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் ஆதரவுடன், உதவி ஒருங்கிணைப்பு செயல்முறையை இன்னும் விரைவாகச் செயல்படுத்த முடியும்.
மேலும், பங்களிப்பாளர்கள் அல்லது வாரிசுகள் யாரேனும் உதவித்தொகை விண்ணப்பங்களைச் செயலாக்குவதில் சிரமங்களையோ அல்லது தாமதங்களையோ எதிர்கொண்டால், அந்த விஷயத்தை நேரடியாகத் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நம்பிக்கையில் சமரசம் செய்ய முடியாது. நீங்கள் என்னை முகநூல், டிக்டாக் அல்லது மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் பின்தொடர் நடவடிக்கை உடனடியாகச் செயல்படுத்தப்படுவதை நான் உறுதி செய்வேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
