நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RM5 மில்லியன் ஊழல் வழக்கு: நான்கு நபர்கள் கைது 

ஈப்போ: 

வடக்கு மலேசியாவைச் சேர்ந்த ஒரு தனியார் உயர்கல்வி நிறுவனத்தைச் (IPTS) சேர்ந்த இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நான்கு நபர்கள், சுமார் RM5 மில்லியன் லஞ்சத்தைக் கோரி, பெற்ற வழக்கில் விசாரணைக்கு உதவும் வகையில் நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்.) மனுவை அனுமதித்த பின்னர், மாஜிஸ்திரேட் எஸ். புனிதா, ஏப்ரல் 11ஆம் தேதி வரை அனைத்து நபர்களுக்கும் தடுப்பு காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

இதற்கு முன்னர், அந்த மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் எஸ்.பி.ஆர்.எம்.-இன் ரிமாண்ட் உடைகளை அணிந்த நிலையில், காலை 10.05 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்தனர். பின்னர், காலை 11.45 மணியளவில் அவர்கள் எஸ்.பி.ஆர்.எம். வாகனத்தில் நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

நேற்றிரவு, பெர்னாமா செய்தி நிறுவனம், நேற்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பேராக் எஸ்.பி.ஆர்.எம். அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. அந்தக் கைதுகளில் 40 வயதைக் கடந்த ஒரு எண்ணெய் நிறுவன அதிகாரியும் ஒரு பொறியியல் நிறுவன இயக்குநரும் அடங்குவர்.

சில நிறுவனங்கள் ஆராய்ச்சி திட்டங்களைப் பெற உதவுவதற்கும், சம்பந்தப்பட்ட தனியார் உயர்கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி நிதிகளை முறையின்றி பயன்படுத்துவதற்கும் லஞ்சப் பணம் வழங்கப்பட்டதாக நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டன.

கைதுகளைத் தொடர்ந்து, எஸ்.பி.ஆர்.எம். மொத்தம் RM8.5 மில்லியன் இருப்பைக் கொண்ட 70 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. மேலதிக விசாரணைக்காக ஏழு வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளது.

இதற்கிடையில், தொடர்பு கொண்டபோது எஸ்.பி.ஆர்.எம். புலனாய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ சைஃபுல் எஸ்ரால் அரிஃபின், கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். இந்த வழக்கு எஸ்.பி.ஆர்.எம். சட்டம் 2009-ன் பிரிவு 16(a)(A) கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset