நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

"இருதய நோயால் துடிக்கும் சிறுவன்": 30,000 ரிங்கிட் நிதியுதவிக்காக போராடும் பெற்றோர்

கோலாலம்பூர்:

இருதயத்தில் துளை உள்ள நிலையில் பிறந்து, தற்போது உயிருக்குப் போராடி வரும் சிறுவன் ஒருவனின் அறுவை சிகிச்சைக்காக RM30,000 ரிங்கிட் நிதி தேவைப்படுகிறது. 

இச்சிறுவனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், அவசர கால அடிப்படையில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், குடும்பத்தின் வறுமைச் சூழல் காரணமாக இந்தத் தொகையைத் திரட்ட முடியாமல் சிறுவனின் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

சிறுவனின் தந்தை ஒரு சாதாரணத் தொழிலாளியாகப் பணியாற்றி வரும் நிலையில், குடும்பத்தின் அன்றாடத் தேவைகளுக்கே பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். 

தற்போதுள்ள நிலையில், பல ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான மருத்துவச் செலவுகளை அவர்களால் சுயமாகப் பொறுப்பேற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. மகனின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் அந்தப் பெற்றோர், பொதுமக்களிடமிருந்தும் நற்பணி அமைப்புகளிடமிருந்தும் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

இந்தச் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கான நிதி திரட்டும் பணிகளைச் சில தன்னார்வ அமைப்புகள் முன்னெடுத்துள்ளன. இரக்கமுள்ள உள்ளங்கள் வழங்கும் சிறு சிறு உதவிகளும் அந்தச் சிறுவனின் எதிர்கால வாழ்விற்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த மருத்துவச் செலவு குறித்த விரிவான விவரங்கள், உதவி செய்வதற்கான வழிமுறைகளைத் தொண்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் தளங்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset