நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலிங்கில் அதிரடிச் சோதனை: 288 கிலோ மானிய சமையல் எண்ணெய் பறிமுதல்

அலோர் ஸ்டார்: 

கெடா மாநிலத்தின் பாலிங், கம்போங் சுங்கை லீமாவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், முறையற்ற வகையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 288 கிலோகிராம் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சக அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். 

கடந்த ஒரு வார காலமாக மேற்கொள்ளப்பட்ட ரகசியக் கண்காணிப்பிற்குப் பிறகு, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

சோதனைக்குள்ளான அந்த வீட்டின் உரிமையாளர், அங்கு உள்ளூர் பலகாரங்களைத் தயாரிக்கும் தொழிலைச் செய்து வந்துள்ளார். இந்தப் பலகாரங்களை தயாரிப்பதற்காக மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை அவர் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. 

அந்த இடத்தின் உரிமையாளரான 33 வயது மதிக்கத்தக்க நபர், இவ்வளவு பெரிய அளவிலான எண்ணெயைச் சேமித்து வைப்பதற்கான எவ்வித அனுமதியோ அல்லது ஆவணங்களோ வைத்திருக்கவில்லை.

சுமார் RM720 ரிங்கிட் மதிப்புள்ள இந்த 288 சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளும் விசாரணைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக 1961-ஆம் ஆண்டு வழங்கல் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இச்சட்டம் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பொருட்கள் பதுக்கல் அல்லது மானிய விலைப் பொருட்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்துத் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வப் புலன எண் அல்லது செயலி வாயிலாகப் புகார் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset