செய்திகள் இந்தியா
மீண்டும் ஒரு பஹல்காம் தாக்குதலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதா? மோடியே உங்களுக்கு வெட்கம் இல்லையா?: மம்தா கேள்வி
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், "தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் ஒரு பஹல்காம் தாக்குதலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதா?" என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடியா மாவட்டத்தில் உள்ள பெதுவாடஹரி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா ஆசிப், கொல்கத்தாவைத் தாக்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், கூச் பெஹார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, ஏன் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கவில்லை? இதன் பின்னணி என்ன? தேர்தலுக்கு முன்பாக மீண்டும் ஒரு பஹல்காம் தாக்குதலை நடத்த ஏதேனும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதா?
மத்திய அரசு மேற்கு வங்க மக்களைக் குறிவைத்தால், அதனை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். இந்தியக் குடிமக்களாகிய நாங்கள் இதுபோன்ற மிரட்டல்களைச் சகிக்க மாட்டோம். நீங்கள் (பிரதமர்) ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் பதவி விலக வேண்டும். இவ்வாறு மம்தா பேசினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
