செய்திகள் உலகம்
இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழிய போகிறது: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன்:
உலக வரலாற்றில் ஒன்றிரவு மிக முக்கிய தருணங்களில் ஒன்றாக இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து 6 வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
மேற்காசிய போரால் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளன. வளைகுடா நாடுகளும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன.
அமைதிக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.
ஆனால், ஈரானோ அதனை மறுத்து வருகிறது.
ஈரானின் அணு உலைகளை தாக்குவோம் என்றும் ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்றும் கூறி ஈரானுக்கு அமெரிக்கா காலக்கெடு விதித்தது. அதனை நீட்டித்தும் வந்தது.
ஆனால், அந்த காலக்கெடு இன்றிரவு 8 மணி வரை இருக்கும் என டிரம்ப் கூறினார்.
அதன் பின்னர் ஈரான் உடன்படவில்லை எனில் கடுமையான தாக்குதல் இருக்கும் என கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட செய்தியில், இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழிய போகிறது என ஈரானுக்கு கடும் எச்சரிக்கை செய்துள்ளார்.
அது மீண்டும் திரும்ப கொண்டு வர முடியாத அளவுக்கு இருக்கும். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை.
ஆனால், அதற்கான சாத்தியம் உள்ளது என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:20 am
மத்திய கிழக்கில் பலமுனைப் போர்: அதிர்வலைகளில் சிக்கியுள்ளது உலகப் பொருளாதாரம்
May 26, 2026, 10:32 am
ஆப்பிரிக்காவை உலுக்கும் இபோலா: இப்போது ஐரோப்பாவுக்கும் பரவுமா?
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு
May 23, 2026, 2:52 pm
