செய்திகள் உலகம்
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
மணிலா:
வடக்கு பிலிப்பைன்ஸின் பாம்பங்காவில் உள்ள ஏஞ்சல்ஸ் நகரில், கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
ஏஞ்சல்ஸ் நகர பேரிடர் இடர் குறைப்பு, மேலாண்மை அலுவலகத்திடமிருந்து (ACDRRMO) இன்று (உள்ளூர் நேரப்படி) அதிகாலை 3.00 மணிக்கு வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக ஏபிஎஸ்-சிபிஎன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 26 பேர் மீட்கப்பட்டதாகவும், 18 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நள்ளிரவில், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஒரு ஆண் பாதிக்கப்பட்டவரை மீட்டதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
மீட்புக் குழுவினர் உடனடியாக அவசர முதலுதவி மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இருப்பினும், மருத்துவமனை வந்ததும் அவர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததிலிருந்து, 24 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன.
இதற்கு முன்னர், இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டல் அடுக்ககத்தில் சிக்கிக் கொண்ட பாதிக்கப்பட்டவர் ஒரு மலேசியர் என்று அடையாளம் காணப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
