செய்திகள் உலகம்
ஆப்பிரிக்காவை உலுக்கும் இபோலா: இப்போது ஐரோப்பாவுக்கும் பரவுமா?
இஸ்தான்புல்:
உகாண்டாவில் மனிதாபிமான பணியில் ஈடுபட்டு திரும்பிய ஆண், பெண் இருவருக்கு இபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இத்தாலியை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதிக காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல் உள்ளிட்ட கடுமையான அறிகுறிகளுடன் அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஆண் ஒருவருக்கு குடல் பாதிப்பும், பெண்ணுக்கு நரம்பியல் அறிகுறிகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் இபோலா தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இத்தாலியில் பதிவான இந்த சந்தேக வழக்குகள் சர்வதேச சுகாதார வட்டாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கோ, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் இபோலா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த மே 17ஆம் தேதி உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்தது.
“இபோலா பரவல் மிகவும் தீவிரமானது… கட்டுப்படுத்துவது கடினமாகி வருகிறது” என WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ள நிலையில், ஆப்பிரிக்காவின் பல நாடுகள் தற்போது உயர் அபாய பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
