செய்திகள் உலகம்
அமெரிக்க அமைதி திட்டத்தை ஏற்க ஈரானுக்கு அழுத்தம்?: தெஹ்ரானில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி பரபரப்பு சந்திப்பு
தெஹ்ரான்:
மேற்கு ஆசியாவை அதிரவைத்துவரும் பதற்ற சூழ்நிலையில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீரின் திடீர் தெஹ்ரான் பயணம் உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்கா முன்வைத்துள்ள புதிய “அமைதி முன்மொழிவை” ஈரான் பரிசீலித்து வரும் வேளையில், அந்த முயற்சிக்கு பாகிஸ்தான் முக்கிய இடைத்தரகராக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் எஸ்மாயில் பக்காயி,
“ஈரான் – அமெரிக்கா இடையிலான கருத்து வேறுபாடுகள் இன்னும் ஆழமாகவே உள்ளன. எந்த இறுதி உடன்பாடும் இன்னும் எட்டப்படவில்லை,” என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஹோர்முஸ் நீரிணை, ஈரான் துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்ட அமெரிக்க தடைகள், லெபனான் உள்ளிட்ட போர் மையங்களில் நிலவும் பதற்றம் போன்ற முக்கிய அம்சங்களும் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ஒரே நேரடி அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தைக்கும் பாகிஸ்தானே நடுவர் நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது ஆசிம் முனீர் முக்கிய பங்காற்றியிருந்தார்.
ஆனால், “அமெரிக்கா அளவுக்கு மீறிய கோரிக்கைகளை முன்வைத்தது” என்று ஈரான் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையில், நேட்டோ கூட்டத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ,
“சில முன்னேற்றங்கள் உள்ளன… ஆனால் இன்னும் எதிர்பார்த்த நிலையை எட்டவில்லை,” என்று தெரிவித்தார்.
மேலும், “நிலைமை மாறாவிட்டால், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வேறு நடவடிக்கைகளையும் பரிசீலிக்கத் தயார்,” என்ற அவரது கருத்து உலக அரசியல் அரங்கில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
