செய்திகள் உலகம்
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
குவெட்டா:
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரையும், அவர்களது குடும்பத்தினரையும் ஏற்றிச் சென்ற ஒரு ஷட்டில் ரயிலில், தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில், குறைந்தது 24 பேர் உயிரிழந்ததோடு மேலும் 70 பேர் காயமடைந்தனர்.
ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதக் குழுவினரே இந்தச் சமீபத்திய தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
கனிம வளங்கள் நிறைந்த, ஈரான், ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த மாகாணத்தில், ரயில்கள், பாதுகாப்புப் படைகள், உள்கட்டமைப்புகளைக் குறிவைக்கும் தொடர் தாக்குதல்களில் இது மிகச் சமீபத்தியதாகும்.
சமீபத்திய ஆண்டுகளில் நாட்டைத் தாக்கிய மோசமான வன்முறை அலையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஒரு கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கிய நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதக் குழுவான பலூச் விடுதலை இராணுவம் (BLA), ஊடகங்களுக்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தத் தாக்குதலுக்கான தாம் நடத்தியதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டது. மேலும், அதை ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என்று விவரித்தது.
இருப்பினும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் அந்தக் கூற்றைச் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
பாகிஸ்தான் ரயில்வே அமைச்சு, அந்த ஷட்டில் ரயில், குவெட்டா காண்டோன்மென்ட் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்று, ஜாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற நீண்ட தூர ரயிலுடன் இணைந்து செல்வதாக இருந்தது. அப்போது, அந்த மாகாணத் தலைநகரில், ரயில் தண்டவாளத்திற்கு அருகில் வெடிப்பு ஏற்பட்டது.
அந்த வெடிப்பு, என்ஜினையும், மூன்று பெட்டிகளையும் தண்டவாளத்தில் இருந்து தடம் புரளச் செய்தது. அதே சமயம், மேலும் இரண்டு பெட்டிகள் கவிழ்ந்தன.
பாதுகாப்புப் படைகள் சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்துள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.
பாதுகாப்பு அதிகாரி ஒருவர், வெடிபொருட்கள் நிறைந்த ஒரு வாகனம், ஒரு குடியிருப்புப் பகுதியில் ரயில் பெட்டிகளில் ஒன்றில் மோதியதாகவும், உயிரிழந்தவர்களில் சிலர் அருகிலுள்ள அடுக்ககங்களில் வசிப்பவர்கள் என்றும் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலிருந்து வெளியான படங்கள், கருகிய வாகனம், சேதமடைந்த குடியிருப்புக் கட்டிடங்கள், முறுக்கப்பட்ட இரும்புக் கம்பிகள், ரயில் தண்டவாளத்திற்கு அருகில் சிதறிய துண்டுகள், வெடித்த இடத்திலிருந்து புகை எழுவதைக் காட்டின.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இந்தக் "கொடூரமான குண்டு வெடிப்பு" சம்பவத்தைத் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர் இரங்கலைத் தெரிவித்தார். மேலும், பலூசிஸ்தான் மக்களுடன் முழு நாடும் ஒற்றுமையாக தோல் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
