செய்திகள் உலகம்
கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு
நியூயார்க்:
அமெரிக்காவின் கலிஃபோர்னியா (California) மாநிலத்தில் பெரிய ரசாயனத் தொட்டியில் கசிவு ஏற்பட்டுள்ளது.
சுமார் 40,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது.
எனினும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற மறுப்பதாகத் தெரிகிறது.
ரசாயனத் தொட்டியில் 7,000 கேலன் (26,000 லிட்டர்) மெத்தில் மெத்தாக்ரிலேட் (methyl methacrylate) இருந்தது.
பிளாஸ்டிக் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம் எளிதில் தீப்பற்றக்கூடியது.
இந்நிலையில் தொட்டி வெடிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
அப்படி நடந்தால் அதிக மக்கள்தொகை கொண்ட அந்தப் பகுதியெங்கும் நச்சுப் புகை பரவும்.
சுற்றியுள்ள எரிபொருள், ரசாயனத் தொட்டிகளும் பாதிக்கப்படலாம்.
இதுவரை யாருக்கும் காயமில்லை; விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றும்படி பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
