செய்திகள் இந்தியா
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் பதவி விலகினார்
புதுடெல்லி:
ஏர் இந்தியா (Air India) விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் (Campbell Wilson) பதவி விலகியுள்ளார்.
வில்சனின் பதவி விலகலுக்கான காரணம் எதுவும் தெரியவில்லை.
பாதுகாப்புத் தொடர்பான சம்பவங்கள், செயல்பாடுகளில் இடையூறு ஆகியவற்றால் அண்மை மாதங்களில் நிறுவனம் மீதான நெருக்கடி அதிகரித்திருந்தது.
நியூஸிலந்தைச் சேர்ந்த வில்சன் 2022ஆம் ஆண்டு ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்புக்கு வந்தார்.
அவரது 5 ஆண்டு ஒப்பந்தம் நிறைவுபெறுவதற்கு முன்பே அவர் பதவி விலகி இருக்கிறார்.
ஏர் இந்தியா நிறுவனமோ டாடா (Tata) குழுமமோ அதுகுறித்துக் கருத்துரைக்கவில்லை.
புதிய தலைவர் பொறுப்பேற்கும்வரை வில்சன் தொடர்ந்து பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
சென்ற ஆண்டு (2025) ஜூன் மாதம் ஏர் இந்தியா விமானம் 171 விபத்துக்குள்ளானது வில்சனின் பதவிக்காலத்தில் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் அகமதாபாத் நகரிலிருந்து புறப்பட்ட சற்று நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது.
ஒருவர் தவிர விமானத்திலிருந்த 241 பேரும் உயிரிழந்தனர்.
"புது தில்லி - டெல் அவிவ் வழித்தடத்தில் மே 31 வரை விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால் இஸ்ரேலில் வசிக்கும் 50,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வெளியேற முடியாமல் அங்கு உள்ளனர். அவர்களை மீட்க ஒன்றிய அரசு எந்த ஏற்பாடும் முறையாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஏர் இந்தியா நிறுவனம் அங்கு விமானத்தை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
