நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளானில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுகளுக்கு மாமன்னரும் துனைவியாரும் அன்புடன் நன்கொடை வழங்கினர்

கோலாலம்பூர்: 

கடந்த மார்ச் இறுதியில் கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் நிகழ்ந்த உயிரிழப்பு விபத்தில் பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு மாமன்னர்  சுல்தான் இப்ராஹிம், ராஜா பெர்மாய்சூரி அகோங் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் அன்புடன் நன்கொடை வழங்கினர்.

இஸ்தானா நெகாராவின் டத்துக் பெங்கெலோலா பிஜாயா டிராஜா, டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் அஸ்மி ரோஹானி, இந்த நன்கொடையை இன்று சிலாங்கூரில் உள்ள பாதிக்கப்பட்டவரின் வீட்டில், 32 வயதுடைய நோர் நாடியா அப்துல் மஜித்திடம் ஒப்படைத்தார்.

அப்போது இஸ்தானா நெகாராவின் சமயஅதிகாரி டத்தோ முனீர் மட் சாலே, இஸ்தானா நெகாராவின் சட்ட ஆலோசகர் டத்தோ ஜுல்ஹாரி அப்துல் ரஷிட், ராஜா பெர்மாய்சூரி அகோங்கின் முன்னாள் செயலாளர் டாக்டர் நாடியா மோனிரா முஹம்மத் தாயிப், ஷா ஆலம் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் ராம்சே அனாக் எம்போல் ஆகியோரும் உடனிருந்தனர்.

"ஷா ஆலமின் செக்சியன் 16-ல் உள்ள இறந்தவரின் வீட்டிற்குச் சென்றபோது, தஹ்லில் வழிபாடும் நடத்தப்பட்டது. இஸ்தானா நெகாராவின் சமய அதிகாரி இந்தத் பிரார்த்தனை கூட்டத்தை வழிநடத்தினார்" என்று இன்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 29 ஆம் தேதி, நோர் நாடியாவின் கணவர் அமீருல் ஹாஃபிஸ் ஒமார் ( வயது 33), ஜாலான் ராயா பாராட்டில் நிகழ்ந்த விபத்தில், மது, போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்தியதாக நம்பப்படும் ஆடவர் தனது மோட்டார் சைக்கிளை மோதியதில் உயிரிழந்தார்.

காலை 11.40 மணியளவில் நிகழ்ந்த அந்தச் சம்பவம், பாதிக்கப்பட்டவர் மற்றொரு காரின் கூரையின் மீது வீசப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. இறந்தவர் 2 முதல் 9 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளையும் விட்டுச் சென்றுள்ளார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset