நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தீவிரம் குறித்த தகவல்களை அடிமட்ட மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

ஜசெகவின் அனைத்துத் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இது தொடர்பில் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உலகளாவிய எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து பெட்ரோலியத்திற்கான தேவையைக் குறைப்பதற்காக, எரிசக்தி, வாகனப் பயன்பாட்டைச் சேமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களை ஊக்குவிக்குமாறும் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அதன் பொதுச் செயலாளர் அந்தோனி லோக்  கூறினார்.

நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதார நலனுக்காக இந்த உலகளாவிய நெருக்கடியை முழுமையாகக் கையாள்வதற்கும், நாட்டின் வளங்கள் விவேகத்துடன் நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை டிஏபி ஆதரிக்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset