நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லஞ்சப் புகாரில் 4 போலிசார் கைது

கோத்தா பாரு: 

கடந்த ஆண்டு RM12,000 தொடர்பான ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில், நான்கு போலிஸ் அதிகாரிகள் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் ஐந்து நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

ஏப்ரல் 11 ஆம் தேதியுடன் முடிவடையும் அவர்க்ளின் தடுப்பு காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் ராயிஸ் இம்ரான் ஹமிட் பிறப்பித்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117-ன் கீழ் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.) தடுப்பு காவலுக்கு விண்ணப்பித்தது.

22 முதல் 42 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் இரண்டு லான்ஸ் கோப்ரல்கள், ஒரு கோப்ரல், ஒரு சார்ஜென்ட் ஆவர்.

அவர்கள் நேற்று மாலை முறையே தங்களின் அலுவலகங்களில் எஸ்.பி.ஆர்.எம்.- ஆல் கைது செய்யப்பட்டனர்.

தானா மேரா மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் பணிபுரியும் இந்த நான்கு அதிகாரிகளும், ஒரு ஆணின் வாகனத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அந்தப் பணத்தைப் பெற்றதாக நம்பப்படுகிறது.

அந்த உள்ளூர் ஆண் கடந்த ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்டார்.

இதற்கு முன்னர், எஸ்.பி.ஆர்.எம்.-இன் ஆரஞ்சு நிற ரிமாண்ட் உடைகளை அணிந்திருந்த அனைத்து சந்தேக நபர்களும், காலை 8.40 மணியளவில் ஒரு வேனில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset