செய்திகள் மலேசியா
காதலியின் மகளைச் சீரழித்த சமையல்காரர்
சிரம்பான்:
கடந்த பிப்ரவரியில் தனது காதலியின் மகளைக் கற்பழித்த குற்றச்சாட்டில், 20 வயதுடைய ஒரு சமையல்காரர் செவ்வாய்க்கிழமை இங்குள்ள செக்க்ஷன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட எஸ். கவீந்திரா, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர் நீதிபதி டத்தின் சூரிதா புடின் முன்னிலையில் அந்த ஒப்புதலை மேற்கொண்டார்.
குற்றச்சாட்டின்படி, பிப்ரவரி 26 முதல் 28 வரை, காலை 8 மணி முதல் 10 மணிக்குள், ரெம்பாவில் உள்ள தாமான் டத்தோ உண்டாங் ஹாஜி முஹம்மத் ஷரீப்பில் உள்ள ஒரு வீட்டில், 16 வயதுடைய ஒரு சிறுமியைக் கற்பழித்ததாக அந்த ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376(1) இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
துணை வழக்குத் தொடரும் அதிகாரி நோராசிஹா அஸ்முனி, தண்டனை வழங்கப்படும் வரை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க முன்வரவில்லை.
எவ்வாறாயினும், அவரை ரிம10,000 ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது. மேலும், நடத்தை அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் தண்டனை வழங்குவதற்கும் அடுத்த ஜூன் 15 ஆம் தேதியை நிர்ணயித்தது.
இதற்கிடையில், கடந்த மார்ச் 20 ஆம் தேதி, ஜெலெபுவின் கெனாபோயில் உள்ள கம்போங் எசோக்கில் ஒரு பாலத்தின் கீழ், தனது 14 வயதுடைய காதலிக்கு உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், ஒரு கிடங்குக் காவலாளி அதே நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
19 வயதுடைய குற்றஞ்சாட்டப்பட்ட முஹம்மத் அமிருல்லா ஃபாட்லி ஒஸ்மான், தான் குற்றமற்றவர் என மறுத்துள்ளார்.
2017 ஆம் ஆண்டின் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(a) கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, பிரம்படி விதிக்கப்படலாம்.
பாதிக்கப்பட்டவரை அணுகக்கூடாது, ஒவ்வொரு மாதமும் அருகிலுள்ள போலிஸ் நிலையத்தில் aஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் நோராசிஹா, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு RM30,000 ஜாமீனை முன்மொழிந்தார்.
வழக்கறிஞர் முஹம்மத் ஹானிஃப் ஹாசன், குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு கிடங்குக் காவலாளியாக மட்டுமே பணிபுரிவதால், RM5,000 க்கு மிகாமல் ஜாமீன் தொகையை நிர்ணயிக்குமாறு முறையீடு செய்தார்.
நீதிமன்றம் RM9,000 ஜாமீனை நிர்ணயித்தது. ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக, வழக்கின் மறு பரிசீலனைக்கு அடுத்த ஜூன் 15 ஆம் தேதியையும் நிர்ணயித்தது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 7, 2026, 5:14 pm
மலேசியாவில் ஜூன் வரை தடையின்றி எரிசக்தி கிடைக்கும்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதி
April 7, 2026, 4:41 pm
நான்தான் மாமன்னரின் குரு: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பெண் மீது வழக்கு
April 7, 2026, 4:17 pm
அசாம் பாக்கி உரையில் பரபரப்பு: பதாகைகளுடன் மேடையை நோக்கிப் பாய்ந்த இளைஞர்கள்
April 7, 2026, 3:53 pm
ஐந்து வாகன விபத்தில் இருவர் காயமடைந்தனர்
April 7, 2026, 3:23 pm
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்: அந்தோனி லோக்
April 7, 2026, 3:05 pm
லஞ்சப் புகாரில் 4 போலிசார் கைது
April 7, 2026, 2:51 pm
மௌனம் என்பது அநீதிக்குத் துணை போவதே: ஈரான் தூதரகத்தின் அதிரடி அறிக்கை
April 7, 2026, 1:14 pm
